Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இனால் தனது Fibre-to-the-Home (FTTH) பாவனையாளர்களுக்கு ‘Life at 300 Mbps’ சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபைபர் இணைப்புகளின் வேகத்தை மேம்படுத்தியுள்ளதுடன், அதிவேகமான இணையத்தள பாவனைக்கான அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.
ஒப்பற்ற, சிறந்த பாவனையாளர் அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையிலும், எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள வேக அதிகரிப்பானது மாதாந்த வாடகை பக்கேஜ்களை கொண்டுள்ள ஏற்கனவே காணப்படும் சகல ஃபைபர் பாவனையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் சுயமாக பொருத்தமானதாக அமையும். அதிவேக புரோட்பான்ட் வேகங்கள் மற்றும் 150Mbps அப்லோட் வேகத்தை வழங்கும் ‘Life at 300Mbps’ இன் அனுகூலத்தைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் எவ்விதமான மேலதிக கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை அல்லது தமது பிளான்களை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. பெருமளவு பயன்படுத்தப்படும் நேரங்களிலும், உயர் தரம் வாய்ந்த இணைய இணைப்பை உறுதி செய்வதற்கு புதிய கொள்ளளவு மேம்படுத்தல்களில் SLT-MOBITEL முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
புதிய SLT-MOBITEL ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள் காத்திருப்பதுடன், அதில் நாளாந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கம் செலுத்தக்கூடிய புரட்சிகரமான அதி-வேக இணையமும் அடங்கியுள்ளது.
டிஜிட்டல் உலகம் என்பது டேட்டா அடிப்படையில் இயங்கும் அப்ளிகேஷன்களை செயற்படுத்த, உயர் இணைய வேகத்துக்கான தேவையை கொண்டுள்ளது என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் நிலையில், பாவனையாளர்கள் உயர் பான்ட்வித் வசதிக்கான தேவையை கொண்டிருப்பதுடன், அதனூடாக டேட்டா அடிப்படையிலான அப்ளிகேஷன்களை உள்வாங்கக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட வர்த்தக நாமம் எனும் வகையில் SLT-MOBITEL ‘Life at 300Mbps’ இனூடாக ஃபைபர் பாவனையாளர்களுக்கு புத்தாண்டில் எதிர்காலத்துக்கு உகந்த இணைப்புத்திறனை பெற்றுக் கொடுத்து, அதனூடாக அவர்களின் மேம்படும் டிஜிட்டல் வாழ்க்கை முறை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago