Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Lanka Realty Investments PLC உடன் கைகோர்த்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள Mulberry Residential complex க்கு நவீன ஃபைபர் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. இதனூடாக நவீன வாழ்க்கை முறைக்கு வலுச்சேர்த்துள்ளது.
இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையில் SLT-MOBITEL இன் நுகர்வோர் வியாபார பிரிவின் பிரதம வணிக அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் Mulberry Holdings (Private) Limited சொத்துக்கள் முகாமையாளர் துஷ்மந்த கசுன் ஆகியோர் கைச்சாத்திட்டதுடன், இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நவீன குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாக Lanka Realty Investments PLC திகழ்கின்றது. கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள The Mulberry Apartments இனால், 121 சொகுசு தொடர்மனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஜிம்னாசியம்கள் மற்றும் இரு நீச்சல் தடாகங்கள் போன்றன அடங்கியிருப்பதுடன், மேம்படுத்திய வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் நவீன அம்சங்களும் அடங்கியுள்ளன.
இதுவரையில், வதிவிட அனுபவத்தை மாற்றியமைக்கும் நவீன ஃபைபர் தீர்வுகள் வழங்குவதில் SLT-MOBITEL முன்னோடியாக திகழ்கின்றது. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உயர் தர சேவைகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் SLT-MOBITEL ஆனது, வதிவிடத் தொகுதிகள் இணைப்பின் பயனை அனுபவிப்பதையும், டிஜிட்டல் முறையில் மேம்படுத்திய வாழிட சூழலை உருவாக்கிக் கொடுப்பதையும் உறுதி செய்துள்ளது.
சொகுசான வாழிட அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் SLT-MOBITEL, ஃபைபர் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, வதிவோருக்கு இலகுவாக இணைப்புகளை ஏற்படுத்தல், பணியாற்றல் மற்றும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றல் போன்றவற்றுக்கு அவசியமான உயர் தீர்வுகள் வழங்குகின்றது. வசிப்போருக்கு தடங்கலில்லாத, அதிவேக இணைப்பு ஆகியவற்றை அனுபவிக்க முடியும். அத்துடன், high-definition ஸ்ட்ரீமிங், மெய்நிகர் சந்திப்புகளில் பங்கேற்றல் அல்லது ஒன்லைன் கேமிங்கில் ஈடுபடல் போன்ற பல்வேறு அம்சங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
SLT-MOBITEL இன் பிரதம வணிக அதிகாரி நுகர்வோர் வியாபாரங்கள் இமந்த விஜேகோன் கருத்துத் தெரிவிக்கையில், “Mulberry residential complex க்கு நவீன SLT ஃபைபர் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கைகோர்த்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நவீன fibre optic வலையமைப்பினூடாக வதிவோரின் வாழிட அனுபவம் மேம்படுத்தப்படுவதுடன், அதிவேக இணைய பாவனை, தொடர்ச்சியான இணைப்பு மற்றும் பல டிஜிட்டல் தீர்வுகளை அனுபவிக்கக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.
Mulberry Holdings (Private) Limited சொத்துக்கள் முகாமைத்துவ பணிப்பாளர் துஷ்மந்த கசுன் கருத்துத் தெரிவிக்கையில், “தரம் தொடர்பில் புதிய தொழிற்துறை நியமத்தை ஏற்படுத்துவது மற்றும் தமது சூழலுடன் ஒத்திசைவான சமூகங்களை ஏற்படுத்துவது எமது நோக்காக அமைந்துள்ளது. SLT-MOBITEL உடன் எமது கைகோர்ப்பினூடாக, எமது வதிவோருக்கு நவீன தொழில்நுட்பத்தை அணுகும் வாய்ப்பு வழங்கப்படுவதோடு, உண்மையில் இணைக்கப்பட்ட வாழ்க்கைமுறையை அனுபவிக்கவும் உதவியாக அமைந்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மற்றும் நவீன தீர்வுகளை பின்பற்றும் Mulberry Apartments இன் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
SLT-MOBITEL மற்றும் Lanka Realty Investments PLC ஆகியவற்றுக்கிடையிலான கைகோர்ப்பினூடாக, நவீன வாழிட அனுபவம், தொழில்நுட்ப ஒன்றிணைப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றை Mulberry Apartments வதிவோரிடையே மேம்படுத்தப்படுவதாக அமைந்துள்ளது. இணைப்புகளுடனான வாழ்க்கை முறையினூடாக வதிவோர் அனுகூலம் பெற முடியும் என்பதுடன், தொழில்நுட்பம் என்பது சொகுசான வாழ்க்கையுடன் வினைத்திறனான வகையில் பிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும். கொழும்பில் நவீன வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான பரந்தளவு டிஜிட்டல் சேவைகளை வழங்கி உண்மையான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago
7 hours ago
7 hours ago