Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
Star Garments Group (“Star”) அண்மையில் நடைபெற்ற 2023/24 காலப்பகுதிக்கான SLITAD மக்கள் விருத்தி விருதுகள் நிகழ்வில், தங்க விருதை சுவீகரித்திருந்தது. இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்திய வண்ணம், சிறந்த மனித மூலதன செயன்முறைகளை தொடர்ந்தும் பின்பற்றுகின்றமையை கௌரவித்து இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை பயிற்சி மற்றும் விருத்தி நிறுவகத்தினால் (SLITAD) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் விருத்தி விருதுகளின் 5ஆம் பதிப்பு, அண்மையில் கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. மக்களினதும், தேசத்தினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் மனித வளங்கள் அபிவிருத்தி செயன்முறைகளை பின்பற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
Star Garments Group இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. சுகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில், “ஆக்கத்திறன், இணைந்த செயற்பாடு மற்றும் மனித மூலதன விருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் உள்ளடக்கமான கலாசாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கும், எமது நிறுவனத்தின் மாற்றியமைப்பு வளர்ச்சி மற்றும் புத்தாக்கமான சிறப்பு ஆகியவற்றின் முக்கிய பங்காளர்களாக திகழும் எமது ஊழியர்களின் செயற்பாடுகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த விருது அமைந்துள்ளது.” என்றார்.
முதன்முறையாக இந்த விருதுகள் வழங்கலில் பங்கேற்றிருந்த Star ஐ பொறுத்தமட்டில் இந்த விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக அமைந்துள்ளது. உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழிற்துறையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தொடர்ச்சியாக Best Workplaces™ இனால் Star தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகத் தரம் வாய்ந்த ஆடைகள் உற்பத்தி, அலங்காரம் மற்றும் திரட்டல் நிறுவனம் தற்போது 10,000க்கும் அதிகமான ஊழியர்களை பணிக்கமர்த்தியுள்ளது. இவர்கள் புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையை உயர் நியமங்கள் மற்றும் தரத்தின் பிரகாரம் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு மற்றும் கைகோர்ப்புகள் போன்றன சிந்தனைகளை செயற்படுத்த ஏதுவாக அமைந்திருப்பதுடன், அவை பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமது ESG செயற்திட்டங்களின் அங்கமாக, Star தொடர்ந்தும், சமூக மற்றும் சூழல்சார் அம்சங்களில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், பணியாளர்களை பொறுத்தமட்டில் தொழிற்துறையின் உயர் ஒழுக்க நியமங்களையும் பேணுகின்றது. அதனூடாக, தனது பிரதான நோக்கத்தில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை உறுதி செய்கின்றது.
இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியில் Star Garments முக்கிய பங்காற்றுவதுடன், நான்கு தசாப்த காலத்துக்கு மேலான அனுபவத்தையும் கொண்டுள்ளது. நிலைபேறாண்மையில் Star ஒரு சம்பியனாக கருதப்படுகின்றது. அதன் எட்டு தொழிற்சாலைகளுக்கு LEED-சான்றளிப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது passive house factory கட்டிடத்தையும் கொண்டுள்ளது. அண்மையில் தனது செயற்பாடுகளை மேற்கு ஆபிரிக்காவுக்கு விஸ்தரிப்பு செய்திருந்தது. IFC இன் உதவியுடன் Togo இல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் பாரியளவிலான ஆடை ஏற்றுமதி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக 4520 நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago