2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

SLIIT மாணவர்களுக்கு வாய்ப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகமான SLIIT, மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு புதிய திறன்களை கட்டியெழுப்பி, தொழில்நிலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.

SLIIT இன் நிபுணத்துவ விருத்தி கற்கைகள் (PDP) ஊடாக மாணவர்களுக்கு தமது கல்வியை மேம்படுத்திக் கொள்ள முடிவதுடன், தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம் ஆற்றலை கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடியும். 

ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, பயிற்சிநெறிகளை முன்னெடுப்பதில் அனுபவம் வாய்ந்த SLIIT இன் PDP பிரிவு கற்பித்தலில் அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் வியாபார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உறுதியான பிணைப்புகளை ஏற்படுத்த ஏதுவாக அமைந்துள்ளதுடன், கல்வி மற்றும் பயிற்சிகளை கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்குகின்றது.

இந்த குறுங்கால கற்கைகள் மற்றும் பயிற்சிநெறிகள் போன்றவற்றினூடாக, தொடர்ச்சியாக வளர்ந்து வரும் உலகில், பங்குபற்றுநர்களுக்கு தமது ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. உயர் பயிற்சிகளைப் பெற்ற நிபுணத்துவ அங்கத்தவர்களுடன் இணைந்து SLIIT இனால் மாணவர்களுக்கு தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு அவசியமான நவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.

SLIIT இன் விருத்தி மற்றும் பொறியியல் சேவைகளுக்கான பணிப்பாளர் உதித கமகே கருத்துத் தெரிவிக்கையில், “துரிதமாக முன்னேற்றத்தைக் காணும் பணிச் சூழலில் பணியாளர்களின் திறன்கள் காலாவதியாக வரும் நிலையில், SLIITஇன் PDP ஊடாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமது திறனை கட்டியெழுப்பிக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே காணப்படும் மற்றும் வளர்ந்து வரும் தொழிற்துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு தொழில் மற்றும் தொழில்நிலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள உதவுவது மாத்திரமன்றி, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளன” என்றார்.

தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியிலும், SLIIT இனால் ஒன்லைன் ஊடாக வெற்றிகரமாக கற்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனவே, இந்த கற்கைகள் ஒன்லைன் மற்றும் நேரடியாக வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் SLIIT நம்பிக்கை கொண்டுள்ளது.

நிபுணத்துவ விருத்திக் கற்கைநெறிகளை தொடர்ச்சியான நிபுணத்துவ விருத்தி கற்கைகள், குறுங்கால பயிற்சிப்பட்டறைகள், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க கூட்டாண்மை பயிற்சிக் கற்கைகள் மற்றும் கணினி, வியாபார மற்றும் பொறியியல் அறிவு பிரிவுகளில் ஒன்லைன் நிபுணத்துவ பயிற்சிகள் என வகைப்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் கற்கைகளினூடாக, இன்றைய பணியிடத்தில் தொழில்நிலை முன்னேற்றத்துகுகு அவசியமான திறன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் வினைத்திறன் மற்றும் வரவேற்பை கவனத்தில் கொண்டு, SLIIT இனால் பரந்தளவு PDP கள் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .