Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 06 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிஸ் அரசாங்கம், அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் அமைப்பு (SDC) மற்றும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட் (பவர்ஸ்) ஆகியவற்றின் நிதி உதவியினால், முன்னெடுக்கப்படும் நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சித் திட்டத்தினால் (SSG), இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் காணப்படும் பல்வேறு வாய்ப்புகளை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களை தயார்ப்படுத்தும் வகையில் திறன்கள் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் பிரகாரம் அண்மையில் அதன் இரு பயிலல் நிலையங்களின் அறுபது மாணவர்களுக்கு பட்டமளிப்பு வைபவம் முன்னெடுக்கப்பட்டது. 4 மாத கால வகுப்பறை பயிலல் மற்றும் 5 மாத கால கொடுப்பனவுகளுடனான தொழிற்பயிற்சி போன்றவற்றுடன் ஒன்பது மாத கால பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டிருந்தது.
சுவிஸ் தொழிற்பயிற்சி திறன் விருத்தி (VSD) பாடவிதானத்துக்கமைய SSG செயற்திட்டம் அமைந்துள்ளதுடன், விருந்தோம்பல் துறை மற்றும் ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. திறன்கள் இடைவெளியை நிவர்த்தி செய்வது, தரமான கல்வி நியமங்களை ஸ்தாபிப்பது, பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது மற்றும் விருந்தோம்பலுக்காக இலங்கையை அதிகளவு நாடும் நாடாக திகழச் செய்வது மட்டுமன்றி, சிறந்த சுற்றுலா மையமாக திகழச் செய்வதை இலக்காக கொண்டு இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
கிரான்ட் கண்டியன் ஹோட்டலில் இந்த சான்றளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்காக சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிரி வால்ட் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் (புலம்பெயர்வு) டொரிஸ் மேனர், பவர் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரொல்ஃப் பிளாசர், தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க ஆகியோருடன் தேசிய இளைஞர் படையணி ஊழிய அங்கத்தவர்கள், பங்காண்மை ஹோட்டல்களின் பொது முகாமையாளர்கள், SHMA ஊழிய அங்கத்தவர்கள் மற்றும் வசதியளிப்போர் என பலரும் கலந்து கொண்டனர்.
நாவுல மற்றும் கண்டி ஆகிய இரு நிலையங்களில் முதலாவதாக SSG நிகழ்ச்சித் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் நுவரெலியாவிலும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் மூன்று மாகாணங்களையும் உள்வாங்கி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக 206 மாணவர்கள் 2023 ஆம் ஆண்டில் உள்வாங்கப்பட்டதுடன், அதில் 152 ஆண் மாணவர்களும், 54 பெண் மாணவிகளும் அடங்கியிருந்தனர். மூன்று நிலையங்களிலும் 26% பெண்கள் உள்ளடக்க வீதத்தை எய்தியிருந்தது. இந்த நிலையங்கள் தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் அமைந்துள்ளதுடன், SHMA உடன் தேசிய இளைஞர் படையணி கைகோர்த்து கற்றல் வசதிகளை ஏற்படுத்தியிருந்தது.
SSG நிகழ்ச்சித் திட்டத்துக்கு பவர் நிறுவனத்தின் உரிமையாண்மையில் காணப்படும் கல்விச் சேவைகளை வழங்கும் நிறுவனமான, சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்வியகத்தினால் (SHMA) ஆதரவளிக்கப்பட்டிருந்தது. உயர் தரமான கல்வி வசதிகளை சர்வதேச நியமங்களுக்கமைய பெற்றுக் கொடுப்பதுடன், உயர் தகைமை வாய்ந்த ஹோட்டலியலாளர்களையும் உருவாக்கிய வண்ணமுள்ளது. EHL நிபுணத்துவ டிப்ளோமா கற்கையினூடாக தொழில்சார் கல்விப் பயிற்சியை (VET) வழங்குவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது. விருந்தோம்பல் கல்வியில் 1893 ஆம் ஆண்டு முதல் முன்னோடியாக அமைந்திருப்பதுடன், 120க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 25,000 க்கும் அதிகமான பழைய மாணவர்களையும் உலகளாவிய ரீதியில் கொண்டுள்ளது.
நாவுல மற்றும் கண்டி நிலையங்களில், 4 மாத கால வகுப்பறை பயிலலைத் தொடர்ந்து, 73 மாணவர்கள் கொடுப்பனவுகளுடனான தொழிற்பயிற்சிகளுக்கான தகைமையைப் பெற்றனர். இதில் தங்குமிடம், உணவுகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றன அடங்கியிருந்தன. கண்டி ஹோட்டல் சம்மேளனம் மற்றும் கலாசார முக்கோண ஹோட்டல் சம்மேளனம் ஆகியவற்றில் பதிவு செய்திருந்த 13 ஹோட்டல்களில் இந்த வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 60 பேர் கற்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர். 82 சதவீத பூர்த்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன், பெருமைக்குரிய ஹோட்டல்களில் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டனர்.
தேசிய இளைஞர் படையணிக்கு, விருந்தோம்பல் துறைக்கு மற்றும் ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையிலான சுவிஸ் தொழில் திறன் விருத்தி (VSD) பாடவிதானத்தை நிறுவி முன்னெடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். SHMA இன் பரந்த மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களினால் தேசிய இளைஞர் படையணியின் கற்கைளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், அதனூடாக திறன் படைத்த மற்றும் தொழில்புரியக்கூடிய இளைஞர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றது. SSG நிகழ்ச்சித் திட்டத்துக்கு தேசிய இளைஞர் படையணி தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது.
இந்த ஆண்டு SSG நிகழ்ச்சித் திட்டம், மார்ச் மாதம் வீரவில பயிலல் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் நாவுல நிலையங்களில் இரண்டாவது ஆட்சேர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது. மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் அம்பாறையிலும் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் புதிய நிலையங்களை ஆரம்பிக்க SSG திட்டமிட்டுள்ளது. வருட இறுதியில், மொத்தமாக பத்து நிலையங்களை நிறுவுவதற்கும், அதனூடாக 2025ஆம் ஆண்டின் இறுதியில் 2,240 இளைஞர்களை திறன்படைத்தவர்களாக தயார்ப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கண்டி நிலையத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. புளத்சிங்கள, கட்டுநாயக்க, ராஜகிரிய, குச்சவெளி, வாழைச்சேவை ஆகிய நிலையங்களில் ஜுலை மாதத்திலும், நாவுல, நுவரெலியா மற்றும் வீரவில நிலையங்களில் ஆகஸ்ட் மாதத்திலும் முன்னெடுக்கப்படும். க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கில மொழியில் C சித்தியுடன் பூர்த்தி செய்த, விருந்தோம்பல் துறையில் தொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் தம்மை பதிவு செய்து கொண்டு, பயன் பெற முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago