2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SHMA இன் முதலாவது திறன் நிலையம் ஆரம்பம்

Freelancer   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின், சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமி பிரைவட் லிமிடெட் (SHMA), நாட்டின் விருந்தோம்பல் துறையில் இளைஞர்களை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல வலுவூட்டும் வகையில், நிலைபேறான வளர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கான (SSG) முதலாவது திறன் நிலையத்தை மாத்தளை மாவட்டத்தின் நாவுல தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையத்தில் நிறுவியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தை சூழ்ந்து காணப்படும் ஹோட்டல்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மற்றும் அப்பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வருமானமீட்டும் மாணவர்களின் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் SHMA கைச்சாத்திட்டது. இதனூடாக கட்டம் கட்டமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

பவர் மற்றும் சுவிட்சர்லாந்து வெளி விவகார பெடரல் திணைக்களத்தின் சர்வதேச ஒன்றிணைவின் (FDFA) முகவர் அமைப்பான அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் அமைப்பு ஆகியவற்றுக்கிடையிலான தனியார் மற்றும் பொது பங்காண்மையாக SSG நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது.

தற்போது, நாவுல தேசிய இளைஞர் படை பயிற்சி நிலையத்தில் மொத்தமாக 54 மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையத்தை தமித அல்விஸ் ஆரம்பித்துள்ளதுடன், மாணவர்களை இணைத்து, நிலையத்தினூடாக அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சுவிஸ் தொழிற்பயிற்சி திறன் விருத்தி பாடவிதானத்தின் பிரகாரம் அமைந்துள்ள இந்த பயிற்சிநெறி, 3 மாத கால வகுப்பறை பயிற்சிகளையும், ஒன்றரை மாத கால இணைந்த பயிலல்களையும், நான்கரை மாத காலப் பகுதியை நட்சத்திர ஹோட்டலில் தொழிற்பயிற்சியையும் கொண்டுள்ளது. மேலும், குறைந்த வசதிகள் படைத்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மென் திறன் விருத்தி பயிற்சிப் பட்டறைகள் முன்னெடுக்கப்படுவதுடன், விருந்தோம்பல் துறையில் அவர்களுக்கு முன்னேறுவதற்கு அவசியமான சிந்தனைகளை கொண்டிருக்கவும் உதவியாக அமைந்திருக்கும்.

மாணவர்கள் மத்தியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், குழுநிலை கட்டியெழுப்பல் செயற்பாடுகள் மற்றும் பிரத்தியேக விருத்தி போன்றவற்றை ஏற்படுத்துவதற்காக 14 நாள் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளையும் தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையம் வழங்குகின்றது. தேசிய இளைஞர் படைகள் பயிற்சி நிலையத்தில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரிலும் இதனை அவதானிக்க முடிகின்றது. மாணவர்களுக்கு Learning Management System (LMS) ஐ அணுகும் வசதி வழங்கப்படுவதுடன், அதனூடாக தமது கற்கை செயற்பாடுகளை சௌகரியமாக முன்னெடுக்கக்கூடியதாகவுள்ளது. இந்த புதிய வழிமுறையினூடாக ஒவ்வொரு மாணவரும் கண்காணிக்கப்பட்டு, அவர்களில் போதியளவு கவனம் செலுத்தப்படுகின்றது.

SSG நிகழ்ச்சித் திட்டத்துக்கு பல்வேறு ஹோட்டல்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளதுடன், மாணவர்களுக்கு இணைந்த பயிலல் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்கவும் முன்வந்துள்ளன. SSG திட்டத்தினூடாக 2025 ஆம் ஆண்டளவில் 2240 திறன் படைத்த இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் தயார்ப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், விருந்தோம்பல் கல்வியை தொடரும் பெண்களின் எண்ணிக்கையை 40% ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. செயற்திட்டத்தின் மூன்றில் இரண்டு பாடவிதானம் பிரயோக, தொழில்நிலைசார் பயிற்சியாக அமைந்திருப்பதுடன், தொழில்பயிற்சியுடன், பல்வேறு ஹோட்டல்களில் தொழில்நிலை நீடிப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இதனூடாக தற்போது விருந்தோம்பல் துறைசார் கல்வியில் காணப்படும் சவால்கள் நிறைந்த செயன்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

SHMA இல் காணப்படும் பரந்த மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களினால், தேசிய இளைஞர் படைகள் பயிற்சி நிலையத்தில் ஆற்றல் படைத்த மற்றும் தொழில்புரியக்கூடிய இளைஞர்களை உருவாக்குவதில் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், SSG செயற்திட்டத்துக்கு தேசிய இளைஞர் படைகள் பயிற்சி நிலையம் தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது.

SHMA முன்னெடுத்திருந்த ஆய்வில், 92.3% ஆன மாணவர்களுக்கு தமது தற்போதைய தொழில்நிலையத்தில் அல்லது புதிய நிறுவனத்தில் பதவி உயர்வுகளை பெற முடிந்தது, 75%க்கும் அதிகமான மாணவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிகின்றமை மற்றும் பலருக்கு தமது வருமானமீட்டும் கொள்ளளவு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .