Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்ஸிலினால் செயல்படுத்தப்படும் நான்கு வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் மேற்கொள்ளும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக ஈடுபாட்டை வலுப்படுத்துதல் (STRIDE) நிகழ்ச்சியின் ஓரங்கமாகும். SEDR இன் அடிப்படை நோக்கம் அமைதியான சகவாழ்வு மற்றும் நியாயமான மற்றும் நீதியான இலங்கைக்கான அபிலாஷையாகும். டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 க்கு இடையில், SEDR இனால், சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், சனசமூக பிணக்குத் தீர்வை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பிணக்குத் தீர்வு மற்றும் சமூக உள்வாங்கல் ஆகியவற்றின் பக்கம் பலத்த கவனம் செலுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூன்று SEDR Active Citizensதிட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் SEDR இன் மூன்று இலக்கு மாகாணங்களிலும் (வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா) நடத்தப்பட்டதோடு, அதன் முதல் கட்டம் அண்மையில் பூர்த்தி செய்யப்பட்டது.
Active Citizens என்பது ஒரு சமூக தலைமைத்துவ பயிற்சி முறையாகும், இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலால் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது, இது கலாச்சார உரையாடல் மற்றும் சமூகம் தலைமையிலான சமுதாய மேம்பாட்டை ஊக்குவிக்கின்றது மற்றும் சமூகங்களுக்குள் மற்றும் சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையை வளர்கின்றது. சமூக அளவிலான பிணக்குகளைத் தீர்ப்பதில் மாற்றுவவழிமுறைகளை ஆதரிப்பதற்கான SEDR இன் அணுகுமுறையில் Active Citizens வழிமுறையானது முக்கியப் பங்கு வகிக்கிறது.
SEDR Active Citizens இல் சமூகத்தில் பல்வேறு ஆர்வங்கள் மற்றும் திறன்களைக் கொண்ட நபர்கள் தங்களை ஒன்றிணைத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் பெற்ற திறன்களைக் கொண்டு அவற்றிக்கு செயல்வடிவம் கொடுத்து ஒரு தனித்தனியான சமூக முனைப்புக்கள் (சமூக செயல் திட்டங்கள்) மூலம் நடைமுறைப்படுத்தினர். இத்திட்டங்கள் தன்னார்வதொண்டர்கள், அரசு மற்றும் அரசு சாராத பங்குதாரர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன் இளைஞர்களால் அவர்களின் சமூகத்திற்குள் வடிவமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தி முடிக்கப்பட்டன. மார்ச் முதல் ஜூன் 2022 வரையான கலப்பகுதியினுள் SEDR Active Citizens15 சமூக செயல் திட்டங்களை செயல்படுத்தினர். இவை அவர்களின் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகளை மையமாகக் கொண்டது.
ஒருவரின் அடையாளம் மற்றும் கலாச்சாரம் பற்றிய சுய விழிப்புணர்வு, நம்பிக்கை மற்றும் ஒருவருக்கொருவர் உறவுகளை வலுவாக்குதல், உரையாடலை ஊக்குவிக்க மற்றும் எளிதாக்குவதற்கான கருவிகள் மற்றும் நுட்பங்களை ஆராய்தல், பிரச்சனையை கண்டறிதல், பிரச்சனையைத் தீர்ப்பது, சமூக இசைவாக்கம் மற்றும் பிணக்கு மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் ஆகிய திறன்களை உள்ளடக்கியதாக பயிற்ச்சி வழங்கப்பட்டது.
SEDR குழுத் தலைவர் ஜாக் கார்ஸ்டென்ஸ் கருத்து தெரிவிக்கும்போது: “பிரிட்டிஷ் கவுன்சிலின் Active Citizens மாதிரியானது, இலங்கையில் சமூக அளவிலான பிணக்குத் தீர்வு முயற்சிகளை வலுப்படுத்தும் SEDR இன் லட்சியத்திற்கு மிகவும் பொருத்தமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. Active Citizens அணுகுமுறையால் பெண்கள் மற்றும் இளம் தன்னார்வலர்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்து, பயனடைந்துள்ளனர் என்பதும், மற்றும் அவர்களின் சொந்த உள்ளூர் சமூகங்களை பாதிக்கும் முரண்பாடுகளின் சில அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்ய அவர்களின் புதிய அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதைப் பார்ப்பதும் மிகவும் ஊக்கமளிக்கிறது." என்று குறிப்பிட்டார்.
Active Citizens மாதிரியைப் பயன்படுத்தி, Active Citizens திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் மூலம் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வீரர்களின் திறனை மேலும் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் இலங்கையின் வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சமூகங்களை உள்வாங்கிய, சூழலுக்கு ஏற்ற மற்றும் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் சமூக செயல் திட்டங்களை வழங்க அவர்களுக்கு ஆதரவளிப்பதை SEDR நோக்கமாக கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago