2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘Retail Brand of the Year - Sri Lanka 2020’ சிங்கருக்கு விருது

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ‘பூகோள வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள்’ (Global Banking and Financial Awards) வருடத்துக்கான இலங்கையின் சில்லறை விற்பனை வர்த்தகநாமம் (Retail Brand of the Year – Sri Lanka 2020) என்ற விருதை Singer (Sri Lanka) PLC வென்றுள்ளது.  

இந்த விருதானது, நிறுவனங்களில் தீர்மானங்களை மேற்கொள்வோர், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வங்கித்துறையைச் சேர்ந்தோரால் வாசிக்கப்படும் முன்னணி நிதியியல் தளமான பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் மீளாய்வு’ இனால் வருடாந்தம் அளிக்கப்படுகின்றது. மேலும், இந்தக் கௌரவமானது, உலகின் பல நிறுவனங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, இதன் 10ஆவது பூகோள வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள் 2020 இற்கு, விண்ணப்பதாரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்தப் பெருமைமிக்க விருதுகளில் ஏதேனுமொரு பிரிவில் இடம்பெற அவை போட்டியிட்டன.  

வருடத்துக்கான சில்லறை விற்பனை வர்த்தக நாமம் விருதை வென்ற, இலங்கையின் முதலாவதும், ஒரேயொரு நிறுவனமும் Singer (Sri Lanka) PLC என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X