2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

Rakuten Viber உடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்

S.Sekar   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

Rakuten Viber இல் உங்கள் காதல் கதைகள் மலர்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புக்களும் கிடைக்கும் என்பதை Viber உறுதி செய்துள்ளது. மறையும் செய்திகள், Cupid Bot, தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் பரிசுகள் என்பன உங்கள் மன்மதனுக்கான அன்பாக இருக்கும்.

தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் பரிசுகள் என்பன உங்கள் மன்மதனுக்கான அன்பாக இருக்கும்.

தனித்தவர்களாக இருந்தாலும் அல்லது மோகமானவர்களாக இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் விசேட மின்-அட்டைகளை உருவாக்குவதற்கும், விளையாட்டுக்களை விளையாடவும், காதல் குறித்த வினாடி வினாக்களை விளையாடி விசேட நாளை அனுபவிப்பதை எமது Cupid Bot உறுதிப்படுத்தும். உங்கள் அன்பையும் பாசத்தையும் மெய்நிகராக வெளிப்படுத்துவதற்கு இந்த விசேட அம்சங்கள் அர்ப்பணிப்பாக இருக்கும்.

அன்பின் மாதத்தில் Viber உடன் நீங்கள் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. வீடியோவை அனுப்புவதற்குப் பதிலாக, உங்கள் சொந்த GIF ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் SO இன் கற்பனைக்கு கொஞ்சம் இடமளிக்கவும். Viber இன் தனிப்பயனாக்கப்பட்ட GIF மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய ஸ்டிக்கர் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பு நினைவுகளை உருவாக்கலாம். இது சரியான வார்த்தையைக் கண்டறிவது கடினம் என்று தோன்றும் போது உங்கள் உணர்வைப் பிரதிபலிக்கும். வீடியோவை உங்களுக்குப் பிடித்த மாதிரி எடிட் செய்து GIF ஐ இட்டு அனுப்பவும். காதலர் தினத்தில் இதய வடிவ எமோடிகான்களைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய படம் / gif உடன் உங்கள் எண்ணங்களை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புக்குரியவர்களுக்கு அழகான வீடியோக்களை அனுப்ப, உங்கள் சட் ஸ்கிரீனில் காணப்படும் வீடியோவை அழுத்தி பின்னர் விடவும்.

மேலே கூறப்பட்ட விடயங்களை விட Viber இல் நாம் எமது பயன்படுத்துனர்களின் அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் என்பது நீங்கள் ஏற்கனவே அறிந்த விடயமாகும். இதனால் தான் காதலர் தினமாக இருந்தாலும், சீனாவின் புத்தாண்டாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் மிகவும் பாதுகாப்பான செயலியாகக் காணப்படுகிறது. இது இயல்பாகவே End-to-end encryption ஐப் பயன்படுத்தும் போது, வழக்கமான அரட்டைகளில் காணாமல் போகும் செய்திகள் போன்ற அதன் பயனர்களுக்கான பாதுகாப்புகளையும் இது மேலதிகமாக வழங்குகிறது. இது உங்கள் செய்திகளுக்கு சுய அழிக்கும் நேரத்தை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. அத்துடன், உங்களின் கூடுதல் பாதுகாப்புக்காக செய்தியைப் பெறுனர் ஸ்கிரீன் ஷொட் எடுத்திருந்தால் அது பற்றி உங்களுக்கு அறிவிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .