Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 22 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
Radisson மற்றும் Radisson Blu வர்த்தக நாமங்களின் கீழ் இலங்கையிலுள்ள மூன்று சொத்துக்களும் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களில் அமைந்துள்ளதுடன் அவை நாட்டில் வெற்றிகரமாக ஓராண்டு பூர்த்தியை நிறைவுசெய்துள்ளன. சொத்து உரிமையாளர்களான Sino Lanka முகாமைத்துவ நிறுவனம், La Vie Hotels & Resorts மற்றும் Radisson Hotel Group ஆகியன இணைந்து Radisson Hotel Colombo இல் பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்வை நடத்தின. இதில் பிரதம விருந்தினர்கள், உள்ளூர் வியாபார உரிமையாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அதன் மூன்று ஹோட்டல்களுக்கான புதிய இலக்கு சந்தைப்படுத்தல் வீடியோ வெளியிட்டதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பானது,
அது 2022 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியதிலிருந்து இலங்கையில் உள்ள Radisson மற்றும் Radisson Blu ஹோட்டல்கள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று இடங்களில் விருந்தோம்பல் அனுபவத்தின் தரத்தை மேலும் அதிகரித்து, எமது ஹோட்டல்களின் விருந்தோம்பலின் தரத்திற்கு அப்பால் சென்று மிகவும் தரமான ஊழியர்கள் சேவையை வழங்கி சிறப்பான சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும்.
நிகழ்வில் உரையாற்றிய மூன்று சொத்துக்களுக்கான பிரதேச பொது முகாமையாளர் அலன் கிறிஸ்டி, 'முக்கிய பங்குதாரர்களுக்கும் அவர்களால் வழங்கப்படுகின்ற தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றிகள். காலி, கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள எமது Radisson மற்றும் Radisson Blu இலங்கையில் தங்குவதற்கான இடம் என்று மட்டும் கூற முடியாது. அவை உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களையும், ஞாபகங்களையும் தரும் நோக்கில் அமைந்துள்ளன. இங்கு வரும் விருந்தினர்கள் நிகரற்ற விருந்தோம்பலை அனுபவித்து அதனை ஞாபத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அவர்களுக்கு அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம்' என தெரிவித்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த La Vie Hotels & Resorts இன் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரதானி சங்கர் ஸ்ரீ குமார் 'மிகவும் ஆற்றல் மிக்கதொரு வருடத்தில் தலைமைத்துவம், கலாச்சாரம் ஆகியன ஊடாக சிறந்த முறையில் செயற்திறன் மிக்க வகையில் ஹோட்டல் குழுமங்களை முன்னெடுத்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்' என கூறினார். அத்துடன் பிராந்தியத்தில் La Vie Hotels & Resorts இன் விரிவாக்கம் குறித்து உரையாற்றிய அவர், இலங்கையில் Radisson Hotel Group வலையமைப்பின் கீழ் அதன் மூன்று ஹோட்டல்களின் நேர்மறையான வழிமுறைகள் தொடர்பாகவும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.
Radisson ஹோட்டல் குழுமத்தின் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் சிரேஷ்ட உப தலைவர் அன்ரே டி ஜொன் கருத்து தெரிவிக்கையில் 'கடந்த 18 மாதங்களில் Radisson kw;Wk; Radisson Blu வர்த்தக நாமங்களின் கீழ் எமது மூன்று ஹோட்டல்களை அறிமுகப்படுத்திய நாளிலிருந்து எம்முடன் இருந்த விருந்தினர்கள் மற்றும் பங்குதார்களுக்கு நன்றிகள். ஆம் என்னால் முடியும் என எமது அணியினர் வெளிப்படுத்திய விருந்தோம்பல் பண்பையும், அவர்கள் வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் காண்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது சேவை ஊடாக எமது விருந்தினர்கள் மற்றும் பங்காளிகளுக்கு மறக்கமுடியாத தருணங்களை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றதுடன் Sino Lanka மற்றும் La Vie Hotels & Resorts உடன் இணைந்து பலமான பங்குதாரராக இருப்பதையும் எதிர்பார்க்கின்றோம்' என கூறினார்.
இலங்கையிலுள்ள மூன்று சொத்துக்களில் மிக அழகிய கடற்கரையோர ஓய்வு விடுதியான Radisson Blu Resort Galle நீண்ட மணல் பரப்பில் அமைந்துள்ள விருது பெற்ற திருமண திடலாகும். 172 விருந்தினர்களுக்கு நன்கு அமைக்கப்பட்ட அறைகள் ஊடாக கடலின் அழகிய காட்சிகளை கண்டு கழிக்க முடியும். அத்துடன் பாரிய நீச்சல் தடாகம் மற்றும் பிள்ளைகளுக்கான கிளப் ஆகியனவும் உள்ளன. நீங்கள் ஓய்வெடுப்பது சொர்க்கத்தில் என்ற உணர்வை உங்களுக்கு தரும். இந்தியாவில் அண்மையில் நிறைவடைந்த 12வது அயல்நாட்டு திருமண திட்டமிடல் மாநாட்டில், மிகவும் இயற்கை எழில்மிகு வகையிலான திருமண திடல்' என்ற அபெக்ஸ் விருது இவ்விடத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago