2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

Prime Lands இரண்டு விருதுகளை சுவீகரிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 14 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்திட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது. தொழிற்துறையில் எம்மை அசல் நியமங்களை ஏற்படுத்துவோராக எம்மை நிலைநிறுத்துவதில் இந்த நோக்கு கைகொடுத்துள்ளதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், ஒப்பற்ற பெறுமதியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.

 

மூன்று தசாப்தகாலமாக, நம்பிக்கையை வென்ற நிர்மாண வடிவமைப்பாளராக Prime Lands தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை தொடர்ந்தும் நிறைவேற்றுவதற்காக புகழ்பெற்றுள்ளது. நீடித்து நிலைத்திருக்கும் மரபுவழியை உருவாக்குவதுடன், சொகுசு. அதிசொகுசு. ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறை வசிப்பிடங்களை, தனது புரட்சிகரமான செயற்திட்டங்களினூடாக Prime Lands மாற்றியமைத்துள்ளது. இலங்கையில் நவீன இல்லத் தொடர்மனை நகரங்களை நிறுவும் நிலைக்கு நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு வசிக்கக்கூடிய, அரவணைப்பான அயலவர் சூழலை உருவாக்கிய வண்ணமுள்ளது.


மேலும், அலங்கார வடிவமைப்பு மற்றும் பலதுறைசார் நிபுணத்துவம் போன்றவற்றில் Prime Lands உயர் நியமங்களை நிறுவுவதுடன், ரியல் எஸ்டேட் முதலீட்டில் அணுகல் திறனை ஏற்படுத்தியுள்ளது. வட்டியில்லாத 1% மாதாந்த தவணைமுறை செலுத்தும் திட்டங்கள் போன்ற புத்தாக்கமான நிதியளிப்பு தெரிவுகளைக் கொண்டு, முதல் தடவை வீடொன்றின் உரிமையாளராக திகழ்வோருக்கு உயர் தர ரியல் எஸ்டேட்டை பெற்றுக் கொள்ள Prime Lands வாய்ப்பளிப்பதுடன், முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வருமதிகளையும் பெற்றுக் கொடுக்கின்றது.

ரியல் எஸ்டேட் துறையில் தூர நோக்குடைய முன்னோடியாக அறியப்படும் Prime Lands, சர்வதேச நியமங்களை எய்தியுள்ளதுடன், அதன் ஒப்பற்ற தரம் மற்றும் நம்பிக்கை போன்றவற்றுக்காக பெறுமதியாக கருதப்படுகின்றது. துறையில் நிறுவனத்தின் செல்வாக்கு செலுத்தும் நிலையை இந்த வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக்கு இரட்டை விருதுகள் மேலும் உறுதி செய்துள்ளன. நாட்டின் பல வடிவமைப்பாளர்கள் துணிகரமான நகர்வுகளை மேற்கொள்வதற்கு தயங்கிய காலப்பகுதியிலும், நியமங்களை Prime Lands சவால்களுக்கு உட்படுத்தி, YOLO போன்ற செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிகரமான அடையாளமாக அதனை நிறுவிவருகின்றது.

Prime Lands இன் இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்துவோர் எனும் வகையில், பெருமளவில் பேசப்படாத, கவனம் செலுத்தப்படாத மற்றும் அதிகம் அணுகப்படாத எமது வாடிக்கையாளர்களின் ஆழமான எதிர்பார்ப்புகள் – கனவுகளை புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றும் ஆற்றலை நாம் கொண்டுள்ளோம். அந்த கனவுகளை நாம் நனவாக்கியிருந்தமையை உறுதி செய்யும் வகையில் இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. எதிர்காலத்தை நோக்குகையில், இலங்கைக்கு அப்பால் நாம் இயங்க எதிர்பார்க்கின்றோம். சர்வதேச ரியல் எஸ்டேட் முன்னோடியாக நாம் தற்போது காலடி பதிப்பதுடன், அதே பெறுமதி, புத்தாக்கம் மற்றும் சிறப்பை ரியல் எஸ்டேட் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X