Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 18 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
Prime Group, “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது” இனை சுவீகரித்துள்ளது. 19 ஆவது தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2024 நிகழ்வின் போது இந்த உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. மனித வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஊழியர் நலன்பேணலுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தும், நேர்த்தியான மற்றும் ஊக்குவிக்கும் பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளுக்கு மனித வளங்கள் தலைமைகளின் சர்வதேச கட்டமைப்பான World Federation of HR Professionals மற்றும் World HRD Congress ஆகியவற்றினால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அண்மைய சர்வதேச சவால்களுக்கு மத்தியில், மனித வளங்கள் செயற்பாடுகளில் சிறப்பை பின்பற்றியிருந்த நிறுவனங்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன.
நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதான அரணாக கருதப்படும், ஊழியர்கள் மீது Prime Group கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. சிறந்த ஊழியர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் Prime Group இன் ஆற்றலை வரவேற்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் நோக்கை நோக்கி பயணிக்கையில் அதில் அங்கம் பெறுவதையிட்டு ஊழியர்கள் பெருமையாக உணர்வதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
Prime Lands Residencies PLC., Prime Group நிறைவேற்று பணிப்பாளர் ஷெஹானா பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறந்த சொத்தக, எம் ஊழியர்கள் அமைந்துள்ளனர். அவர்களின் நலன் என்பது எமது பிரதான முன்னுரிமையாகும். மகிழ்ச்சியான ஊழியர்களால் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தில் சிறந்த அக்கறை கொள்ளப்படும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
சிறந்த ஊழியர் வர்த்தக நாமமாக Prime Group தெரிவு செய்யப்பட்டமையில், எதிர்காலத்துக்கு தயாரான பணியாளர்களை கட்டியெழுப்புவது மற்றும் சவால்களுக்கு மத்தியில் இயங்கக்கூடிய நிறுவனத்தை கட்டியெழுப்புவது போன்றவற்றில் தொடர்ச்சியாக காண்பித்திருந்த முயற்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. திறன் முகாமைத்துவம், பணிச் சேர்ப்பு மூலோபாயங்கள் மற்றும் பணியிடத்தல் சுகாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற குழுமத்தின் வழிமுறைகள் இதர நிறுவனங்களுக்கும் அவற்றை பின்பற்றுவதற்கு முன்மாதிரியானதாக அமைந்துள்ளது. Prime Group இன் மனித வளங்கள் செயற்பாடுகள் நிறுவனத்தின் பெறுமதிகளில் ஆழமாக ஊடுருவியுள்ளதுடன், தலைமைத்துவ பிரத்தியேக வழிமுறை மற்றும் கலாசாரம் ஆகியன அணியினரை மேம்படுத்தப்பட்ட ஈடுபாடு மற்றும் உரிமையாண்மை போன்றவற்றை நோக்கி நகர்த்துவதாக அமைந்துள்ளது.
தொற்றுப் பரவல் காலம் முதல் தொடர்ச்சியாக எழுந்திருந்த சவால்கள் நிறைந்த சூழலிலும் புத்தாக்கமாகவும் வளர்ச்சியை தக்க வைக்கும் வகையிலும் பணியாற்ற ஊழியர்களை வழிநடத்தியிருந்தமைக்கான பிரதிபலிப்பாக Prime Group இன் வெற்றி அமைந்துள்ளது. மாற்றத்தை நோக்கிய குழுமத்தின் வழிமுறையினால் உற்பத்தித் திறன் மாத்திரம் மேம்படுத்தப்படாமல், நிறுவனத்தின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளது. அத்துடன், உயர் மனநிலை மற்றும் சிறந்த பணிப் பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்கும் சூழலையும் நிறுவனத்தில் ஏற்படுத்தியுள்ளது.
Prime Group இன் நிறைவேற்று தலைமைத்துவ அதிகாரி சன்மித் தருண கருத்துத் தெரிவிக்கையில், “குழுமத்தின் வெற்றியின் பின்னணியில் பிரதான அரண்களாக எமது ஊழியர்கள் திகழ்கின்றனர் என்பதை மீள உறுதி செய்யும் வகையில் இந்த விருதை வெற்றியீட்டியிருந்தமை அமைந்துள்ளது. சகல பங்காளர்களுக்கும் சிறந்த பணியிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாகவும் இது அமைந்திருந்தது.” என்றார்.
சிறந்த முன்னுதாரணமாக Prime Group தொடர்ந்தும் திகழ்வதுடன், இலங்கையில் தொழிலாளர் வர்த்தக நாமத்தில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதிலும், இதர நிறுவனங்களையும் ஊழியர்களுக்கு முக்கியத்துமளித்து, சிறப்பு மற்றும் பராமரிப்பு நிறைந்த கலாசாரத்தை கட்டியெழுப்பவும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
39 minute ago
45 minute ago