Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 05:10 - 0 - 89
SLT-MOBITEL, Prime Lands Residencies PLC உடன் அண்மையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அதனூடாக, கொழும்பு 7, வோட் பிளேசில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதி சொகுசு வதிவிடத் தொகுதியான ‘The Grand’ இல் SLT-MOBITEL Fibre இணைப்ப வசதியினூடாக பரிபூரண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.
SLT இன் பிரதம பிராந்திய வியாபார அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் Prime Lands Residencies PLC ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்சுள வீரக்கொடி ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் SLT-MOBITEL மற்றும் Prime Lands Residencies PLC ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள Grand தொடர்மனைகளினூடாக உயர் சௌகரியம் மற்றும் பிரத்தியேகத்தன்மை போன்றன வழங்கப்படுவதுடன், வாழ்வதற்கு பொருத்தமான உயர்ந்த சொகுசான நியமங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. 37 மாடிகளைக் கொண்டதுடன், 160 மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. Grand இனால் 50,000 சதுர அடிப் பரப்பளவு இடவசதியைக் கொண்டுள்ளதுடன், சில மாடிகளில் ஓய்வுநேர மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்காக உள்ளக மற்றும் வெளியக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பங்காண்மை தொடர்பில் மஞ்சுள வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், “Grand என்பது வசிப்போருக்கு மிகச் சிறப்பான வாழ்க்கை முறை அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. SLT-MOBITEL உடன் கைகோர்த்துள்ளமையினூடாக, உயர் தரம் வாய்ந்த ஃபைபர் இணைப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதிலும், அதனூடாக smart home மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதிலும் முழு நம்பிக்கையை கொண்டுள்ளோம்.” என்றார்.
SLT-MOBITEL இனால், Grand’இன் சகல பகுதிகளுக்கும் ஃபைபர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அதிவேக இணைய வசதி வழங்கப்படுவதுடன், தெளிவான குரல் தொடர்பாட்ல மற்றும் உலகத் தரம் வாய்ந்த களிப்பூட்டும் அம்சங்களுடனான high definition (HD) TV வசதியை PEO TV ஊடாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.
SLT இன் பிரதம பிராந்திய வியாபார அதிகாரி இமந்த விஜேகோன் கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group இன் இந்த மாபெரும் ‘The Grand’ வோட் பிளேஸ் திட்டத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். ஸ்மார்ட் தொடர்மனைகளினூடாக, மாறிவரும் நுகர்வோரின் வாழ்க்கை முறையில் அடிப்படை மாற்றம் பிரதிபலிக்கப்படுகின்றது. அவற்றில் காணப்படும் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் ஃபைபர் தீர்வுகளினூடாக, SLT-MOBITEL இனால், உலகத் தரம் வாய்ந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அவற்றினூடாக சர்வதேச நியமங்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
சொகுசான வாழிடத்தை உருவாக்குவதில் Grand இன் பெறுமதிகளை பேணும் வகையில், வசதிப்போருக்கு SLT-MOBITEL இன் துரித மற்றும் தங்கியிருக்கக்கூடிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் smart home automation தீர்வுகளினூடாக எதிர்காலத்துக்கு பொருத்தமான வாழ்க்கை முறையை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். SLT-MOBITEL இன் ஸ்மார்ட் வாழிட தீர்வுகளினூடாக, உயர் தொழில்நுட்ப செயற்பாடுகளை அணுகக்கூடியதாக இருக்கும் என்பதுடன், வாழ்க்கையை அதிகளவு அனுபவித்து வாழக்கூடியதாக இருக்கும். புதிய சாதனங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் அனுபவிக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
13 Apr 2025
13 Apr 2025