Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளாஸ்ரிக் கழிவுகளால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் New Anthoney’s Farms (Private) Ltd, 100 சதவீதம் உக்கும் பொதியை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, தமது உணவு பொதியிடல் செயன்முறையில் உக்கும் பொதியை அறிமுகம் செய்த முதலாவது மற்றும் ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக திகழ்கின்றது.
புகழ்பெற்ற ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவுகளுக்காக இந்த உக்கும் பொதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொதி உற்பத்தியில் கஞ்சிப்பசை, செலுலோசு, தாவர எண்ணெய், சீனி, கோரைப்புல் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை நுகர்வுக்கு பாதுகாப்பானதாகவும், விரைவில் உக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளன. பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி என்ப குறுங்கால தீர்வுகளை மாத்திரம் வழங்குகின்றது என்பதால், சூழலுக்கு நட்பான மாற்று பொதியிடலை நிறுவனம் இனங்கண்டிருந்தது.
நுகர்வோருக்கு மீள்சுழற்சி செய்து கொள்ளக்கூடிய அல்லது கொம்போஸ்ட் உரமாக மாற்றிக் கொள்ளக்கூடிய பொதிக்கான தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், New Anthoney’s Farms இனால் நெகிழ்ச்சியான ஃபிலிம் மாதிரியை வடிவமைக்க முடிந்திருந்தது.
New Anthoney’s Farms பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “எமது சகல பொதியிடல் தயாரிப்புகளையும் 100 சதவீதம் சூழலுக்கு நட்பான உக்கக்கூடியவையாக மாற்றும் நடவடிக்கையானது நிறுவனத்தின் சூழலுக்கு நட்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அர்ப்பணிப்புக்கமைய அமைந்துள்ளது. எமது R&D பிரிவினால் தொடர்ச்சியாக முன்னணி ஆய்வு நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் கல்விமான்களுடன் இணைந்து நிலைபேறான பொதியிடல் தீர்வுகளை தயாரிக்கும் வழிமுறைகள் இனங்காணப்பட்ட வண்ணமுள்ளன.” என்றார்.
புள்ளி விவரங்களின் பிரகாரம், இலங்கையின் பிளாஸ்ரிக் நுகர்வு என்பது வருடாந்தம் 15 சதவீதத்தை விட அதிகமாக காணப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் ஆயிரக் கணக்கான பிளாஸ்ரிக் மூலப் பொருட்களில் 70 சதவீதம் உள்நாட்டு பாவனைக்கு பெறப்படுகின்றது. நாட்டின் சூழல் கட்டமைப்புக்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ள மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை கட்டாயமான தேவையாக அமைந்துள்ளது.
அண்மைய மாதங்களில், பொறுப்பு வாய்ந்த பிளாஸ்ரிக் கழிவகற்றல் செயன்முறை தொடர்பில் நாட்டினால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, உற்பத்தியாளர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது மீளப் பயன்படுத்தக்கூடிய, மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய அல்லது கொம்போஸ்ட் ஆகக்கூடிய பொதியிடல் முறைகளை பின்பற்ற தம்மை அர்ப்பணித்த வண்ணமுள்ளன. கோழி இறைச்சி உற்பத்தித் துறையில் இந்த வழிமுறையை பின்பற்றுவதையிட்டு New Anthoney’s Farms மிகவும் பெருமை கொள்கின்றது.
நெதர்லாந்தைச் சேர்ந்த Control Union இனால் Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கைக்கமைய இலங்கையைச் சேர்ந்த ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக இந்நிறுவனம் திகழ்வதுடன், ISO 14064-1:2018 நியமங்களுக்கமைய உற்பத்திப் பணிகளையும் முன்னெடுக்கின்றது. New Anthoney’s Farms இனால் தொடர்ச்சியாக பரந்தளவு சூழல் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .