Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 06 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
NDB வங்கி சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரத்தை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நவீன க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய வியாபார முகாமைத்துவத்திற்கும் உதவும் ezBiz சேவையை அறிமுகப்படுத்த Think Cube Solutions தனியார் நிறுவனம் மற்றும் NDB வங்கி ஆகியன அண்மையில் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
'ஜயகமு ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்திற்கமைவாகவும் அதன் அடுத்த கட்டமாக NDB வங்கியில் தமது வாடிக்கையாளர்களின் சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரத்தின் சக்திக்கு உரம் சேர்த்து மேலும் அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்ல நவீன தொழில்நுட்பம், வியாபார முகாமைத்துவத்திற்கு அவசியமான சேவைகள் மற்றும் அவை தொடர்பான விவரங்களை வழங்க ezBiz சேவையை தேர்ந்தெடுத்துள்ளது.
இச்சேவையை அறிமுகப்படுத்துவதுடன் NDB வங்கியின் சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரம் மற்றும் தொழில்முனைவோருக்கு வழங்கும் சேவைக்கு ஓர் புதிய களம் கிடைக்கப்பெறுவதுடன், இவ் வணிக வியாபார அபிவிருத்திக்கும் அத்தியாவசிய வியாபார தீர்வுக்கான முடிவுகளை எட்டுவதற்கு சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரிகளுக்கு சிறந்ததோர் ஆதரவாக திகழும்.
ezBiz மென்பொருள் நவீன க்ளவுட் தொழில்நுட்பத்தினூடாக வியாபாரிகளுக்கு மிகவும் விரிவான சேவைகளை வழங்குவதுடன், எந்தவொரு இடத்திலிருந்தும் தமது வியாபார முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது. இச் சேவையில் வியாபார சேவையான வியாபாரத்தின் ஊழியர்கள் சிலரின் மூலம் குறிப்புகளை எடுத்துக்கொள்ளும் வசதியினை பெற்றுத்தருவதுடன் விற்பனைகள் தொடர்பான விவரக்குறிப்புகள் மற்றும் கையடக்கத் தொலைபேசியிலுள்ள மென்பொருள் ஊடாகவும் வழங்கப்படுகின்றது.
'இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரங்களுக்கு அத்தியாவசியமான சேவைகள், அத்தியாவசியமான விதத்தில் வழங்கிடவும், அபிவிருத்திச்செய்வதுமே எமது முக்கிய கொள்கையாகும். இதன் காரணமாகவே NDB வங்கியின் 'ஜயகமு ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டமானது சிறப்பான வெற்றிறை எட்டியுள்ளது. இவ்வகையான NDB தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது மொத்த வியாபாரக் கட்டுப்பாடு, கடன் கொடுக்கல் வாங்கல்கள், ஊழியர்களது ஊதிய விபரக்குறிப்புகள், நிதி முகாமைத்துவம் மற்றும் அனைத்து வகையான கணக்குகள் தீர்வு மற்றும் பேணுதல் போன்றவற்றை மிக இலகுவாக மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது.' என திமந்த்த செனவிரத்ன - இயக்குனர், குழு தலைமை நிர்வாக அதிகாரி (NDB) கூறினார்.
'இவ் ஒப்பந்தமானது சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரத்தை மென்மேலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்வது மிக முக்கியதோர் கட்டமாகும். இதனூடாக, கடந்த சில ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட சிறு மற்றும் நடுத்தர வணிக வியாபாரங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, இடர்காணா பலத்துடன் முன்னோக்கி சென்றிடுவதற்கு ஆதரவாககவும் வியாபார நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்திச் செல்லும் வாய்ப்பு கிட்டும்.' என அலெக்ஸ் லவல் - இயக்குனர் (Think Cube Solutions (தனியார்) நிறுவனம்) கூறினார்.
NDB வங்கி மிக விரைவாக முன்னேறிச் செல்லும் மாபெரும் வங்கியெ இலங்கையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், முற்கொடுப்பனவுகளில், 21% ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி வீதம் மற்றும் வைப்புகளில் 25% வளர்ச்சி வீதமும் கடந்த நான்காண்டுகளில் பதிவாகியுள்ளது.
Think Cube நிறுவனம் க்ளவுட் தொழில்நுட்பத்தை உபயோகித்து வணிக வியாபாரங்களுக்கு நவீன டிஜிட்டல் சேவையினை வழங்கும் ஓர் நிறுவனமாகும். Think Cube நிறுவனம் நித்தமும் நிரந்தரமுமாக நவீன டிஜிட்டல் சேவைகளை தயாரிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் அச் சேவையை மேலும் மேம்படுத்திடும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
45 minute ago
1 hours ago