2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

NDB இலங்கையில் உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்துகிறது

J.A. George   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட விளக்கம் : தினுக பெரேரா, COO – LankaClear, சன்ன டி சில்வா, GM/CEO – LankaClear, திமந்த செனவிரத்ன, பணிப்பாளர் /GCEO_NDB வங்கி, தீபால் அகுரெடியாகம COO _ NDB வங்கி, தமித்த சில்வா, AVP,   டிஜிட்டல் நிதி சேவைகள், – NDB வங்கி,

ஒவ்வொரு நகர்விலும் புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் தேசிய அபிவிருத்தி வங்கி PLC டிஜிட்டல் அரங்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. 

டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வங்கியை நோக்கிய இந்தப் பயணத்தில், உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கையொப்பத்தை செயல்படுத்திய முதல் வங்கியாக NDB விளங்குகிறது.  

NDB எப்போதும் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளதுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை மறுவரையறை செய்ய மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை இணைக்கிறது.  

NDB வங்கி, இலங்கையில் தற்போது டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கும் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அதிகார சபையான LankaSign உடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் ஆவணங்களில் உடல் கையொப்பமிடும் செயல்முறைக்கு பதிலாக வசதியாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பிழை இல்லாமல் இருக்கவும் ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்பத்தை இடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு டிஜிட்டல் கையொப்பம் கிரிப்டோகிராஃபிக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 
உடல் கையொப்பத்தைவிட சிறந்த ஆவணப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதுடன் விசேடமாக கையொப்பத்தினை சேதப்படுத்த முடியாதவாறு உறுதியாக்குகிறது. 

ஒரு பௌதீக ஆவணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றாலும், ஒரு இலத்திரனியல் ஆவணத்தில் ஒரு டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டால், அது சேதப்படுத்த முடியாதவாறு உறுதியாக்கப்படுகிறது. LankaSign டிஜிட்டல் சான்றிதழ்களுடன் ஆவணங்களில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுவது அங்கீகாரம், ஒருமைப்பாட்டுடன் மறுதலிக்க முடியாதவாறு அதனை உறுதி செய்கிறது. 

இலங்கையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கியாக மாறும் நோக்குடன் 'இந்த செயல்முறையானது உள் மற்றும் வெளிப்புற டிஜிட்டல் மயமாக்கலை ஒரே நேரத்தில் இயக்கி, டிஜிட்டல் தேசத்தை உருவாக்கும் தேசிய நோக்கத்தை ஆதரித்து, முன்னோக்கிச் செல்லும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குகின்ற அதேநேரம்  உள்நாட்டில் காகிதப் பயன்பாடற்ற சூழலை உருவாக்குகிறது' என NDB வங்கியின் பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திமந்த செனவிரத்ன தெரிவித்தார்.

'NDB வங்கியானது வரையறையற்ற வாய்ப்புகளை வழங்கும் பயணத்தில் உள்ளது, அங்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த புதிய மேம்பாட்டின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் நிதி நல்வாழ்வு பாதுகாப்பானதுடன் பல வசதிகள் சேர்க்கப்பட்டதும் பிழைகள் இல்லாததுமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார். 
  
NDB வாடிக்கையாளர்களுக்கு LankaSign டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் NDB உடனான கூட்டிணைவு பற்றி LankaClear இன் GM/CEO திரு.சன்ன டி சில்வா பேசுகையில்,  'LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன, இருப்பினும் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதில் இத்தகைய தீர்வின் பயன்பாடு மிக அதிகமாக உணரப்பட்டது. 

LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் பாதுகாப்பானவை, கையொப்பமிடுபவர்கள் பயணம் செய்யும் போது அல்லது தொலைதூரத்தில் உள்ளபோது ஒப்புதல்களைப் பெற உடல் கையொப்பங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களுக்கு வசதியான மற்றும் செலவு குறைந்த தீர்வு இதுவாகும்.  NDB டிஜிட்டல் கையொப்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதானது வியாபார செயல்முறைகளை திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும் தானியக்கமாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதப்படலாம். 

மிக முக்கியமாக, LankaSign இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டத்துடன் இணங்குகிறது, எனவே, LankaSign டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்தி கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றங்களில் இலத்திரனியல் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.  இது வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும், அதே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர் தொடர்புகளிலும் அதிக செயல்திறன் மற்றும் வசதியைக் கொண்டுவரும்.' என்றார்.  

வங்கி டிஜிட்டல் தளத்தில் சாதித்த பல முதன்மைகளுடன் சேர்த்து சமீபத்தில் அறிமுகப்படுத்தியதே வீடியோ KYC (vKYC) அடிப்படையிலான கணக்கு ஆரம்பிக்கும் வசதியாகும். vKYC செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளைக்கு வருகை தராமல், வீட்டிலிருந்தவாறே வசதியாகவும் பாதுகாப்பாகவும் NDB கணக்குகளைத் திறக்க வழிசமைக்கிறது. 

மேலதிகமாக, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட கடன் அறிக்கைகளை (iReport) பதிவுசெய்து கோரக்கூடிய ஒரு தொந்தரவு இல்லாத மற்றும் வசதியான முறையை உருவாக்க கடன் தகவல் பணியகத்துடன் (CRIB) இணைந்த முதல் வங்கியும் NDB ஆகும். மற்றும் NDB NEOS மூலம் இலங்கையில் எங்கிருந்தாலும் தனிப்பட்ட கடன் மதிப்பெண் அறிக்கைகளை (CRIB Score) பெற்றுக் கொள்ள முடிகிறது.
 
போட்டிமிக்க சூழலிலும் NDB டிஜிட்டல் வங்கியில் முன்னணியில் உள்ளதுடன் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தொடர்ந்து நூதனமான முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  இதற்கமைய,  Asiamoney சிறந்த வங்கி விருதுகளில் '2021 இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கி'க்கான விருதை வென்றது. 

இதற்கு மேலதிகமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற குளோபல் ஃபைனான்ஸ் இதழால் இந்த வங்கி 2021 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த வங்கி என முடிசூட்டப்பட்டது. அத்துடன் இங்கிலாந்தின் தி பேங்கர் இதழால்; இலங்கையின் ஆண்டின் வங்கியாக அங்கீகரிக்கப்பட்டது.  NDB வங்கி இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4 வது பெரிய வங்கியாகும். அத்துடன் NDB குழுமத்தின் தாய் நிறுவனமுமாகும். 

இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவை நிறுவனமான NDB குழுமம் இலங்கை மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதற்காக அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவைகளை தடையின்றி அணுகும் வகையில் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X