2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

MillenniumIT ESP மற்றும் STEMUp கைகோர்ப்புக்கு வலிமை சேர்ப்பு

S.Sekar   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

MillenniumIT ESP, இலாப நோக்கற்ற அமைப்பான STEMUp உடன் துறைசார் ஆலோசகராக கைகோர்த்திருந்தது. இந்தப் பங்காண்மையின் நோக்கமானது, உள்நாட்டு மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பிரிவுகளில் உயர் கல்வியை தொடரச் செய்து, STEMUpஇன் புதிய நோக்கமான Artificial Intelligence (AI) அணுகலுக்கு அவசியமான அறிவையும் தொழில்நுட்பத்தையும் நாட்டின் சகல மாணவர்களுக்கும் பரவச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பங்காண்மை அமைந்திருப்பதுடன், MillenniumIT ESP இனால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட நிலைக்கு வழிகோலுவதாக அமைந்திருக்கும். மாணவர் ஈடுபாடு மற்றும் பங்கேற்பை ஊக்குவிப்பதை உறுதி செய்துள்ளதுடன், தொழில்நுட்ப ரீதியில் அறிவார்ந்த புதிய தலைமுறை நபர்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. அறிவு, நிபுணத்துவம் மற்றும் தகவல் போன்றவற்றை அணுகுவதை மேம்படுத்தும் வகையில் இந்த கைகோர்ப்பு அமைந்திருப்பதுடன், புதிய திறமைகளை எய்துவதற்கு அவர்களை வழிநடத்தி, சமூகத்துக்கு பயனளிக்கும் இனங்காணல்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

MillenniumIT ESP’ இன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சிவான் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “STEMUp உடனான எமது பங்காண்மை என்பது இலங்கையின் அபிவிருத்திக்கும், நாட்டின் எதிர்கால தலைமுறையின் மேம்பாட்டுக்கும் எம்மால் பங்களிப்பு வழங்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. நாளைய வளர்ச்சிகளுக்கு அவர்களை தயார்ப்படுத்துவதாக நாம் அமைந்துள்ளோம்.' என்றார்.

Micro:bit SLUG, CoderDojo Sri Lanka, Raspberry Jam மற்றும் STEM தூதுவர்கள் போன்ற பல்வேறு தன்னார்வ செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தன்னார்வ அடிப்படை செயற்பாடாக STEMUp அமைந்துள்ளது. ஒவ்வொரு உப திட்டங்களும் தமது சொந்த நிகழ்ச்சித்திட்டங்களை கொண்டுள்ளன. மாணவர்களுக்கு தமது கல்விப் பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் STEM இல் ஆர்வமுள்ள மாணவர்களை அதில் அதிகளவு ஈடுபடுத்தும் வகையில் பல்வேறு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் மையமாக இது அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .