Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூர நோக்குடைய மாணவர் தொழில்முயற்சியாளர்களுக்கு Microsoft AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தாக்கமான தீர்வுகளை வழங்கக்கூடிய சர்வதேச ரீதியிலான தொழில்நுட்பத் திறன் காண் போட்டியான Microsoft Imagine Cup, 2024 ஆம் ஆண்டுக்காக இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Microsoft Imagine Cup தற்போது 22 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படுகின்றது. தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்தப் போட்டி அமைந்துள்ளதுடன், இந்த ஆண்டு AI இல் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்பதனூடாக மாணவர்களுக்கு, USD 1,000 Azure Credits மற்றும் USD 2,500 OpenAI Credits ஆகியவற்றுடன், நிபுணர்களின் வழிகாட்டல்களைப் பெற்று நவீன AI தொழில்நுட்பத்தை அணுகும் வாய்ப்பு கிடைப்பதுடன், தமது AI பயணத்தை துரிதப்படுத்திக் கொள்ள முடியும். நிபுணத்துவ தொழில்நுட்ப மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆலோசனை வழங்கலுடன், USD 100,000 தொகையை வெல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். மேலும் Microsoft தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சத்யா நதெல்லாவுடன் ஆலோசனை வழிகாட்டல் அமர்வில் பங்கேற்வும் முடியும்.
சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் இந்தப் போட்டித் தொடர் ஆரம்பமானதுடன், இலங்கையின் மாணவர்களுக்கும் உலகளாவிய போட்டியின் இறுதிச் சுற்றுக்கும், ஆசியாவின் வெற்றியாளர்களாகவும் தெரிவாகியிருந்தனர். இந்த ஆண்டு, தகைமை சுற்றில் தெரிவானதன் பின்னர், அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள். Imagine Cup பங்குபற்றுநர்கள் எனும் வகையில், மாணவர்களுக்கு விறுவிறுப்பான Founders Hub ஐ அணுகும் வாய்ப்பு வழங்கப்படும். அதனூடாக அனைவருக்கும் தொழில்முயற்சியாளராக தெரிவாகி, தமது சமூகங்களுக்கு மீளளிப்பதற்கு வாய்ப்பை வழங்கும். Azure, including OpenAI GPT-3.5 Turbo மற்றும் GPT-4, Meta இடமிருந்து Llama 2 மற்றும் பல முன்னணி AI மாதிரிகளை அணுகி ஆதரவைப் பெற முடியும்.
இந்தப் போட்டி தொடர்பாக Microsoft ஸ்ரீ லங்கா மற்றும் மாலைதீவுகள் முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் Microsoft Imagine Cup ஐ அறிமுகம் செய்வதையிட்டு பெருமை கொள்கின்றோம். மாணவ தொழில் முயற்சியாளர்களுக்கு பாரியளவில் சிந்தித்து, வாய்ப்புகளை கண்டறிந்து, புத்தாக்கமான சிந்தனைகளினூடாக, உலகின் மாபெரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளோம். இம்முறை போட்டியின் போது AI இல் அதிகளவு கவனம் செலுத்தப்படுவதுடன், மாணவர்களின் தீர்வுகள் கண்டிப்பாக Microsoft Azure உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் டிஜிட்டல் மாற்றியமைப்பு மற்றும் AI பயணத்துடன் இணைந்துள்ள இந்தப் போட்டியினூடாக, அடுத்த தலைமுறை தொழில் முயற்சியாளர்களுக்கு சமூகத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெளிப்படுத்தப்படும் புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறனை நான் பெருமளவில் எதிர்பார்ப்பதுடன், தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், உலக சம்பியன்ஷிப்பை எய்துவதற்கான சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை நான் ஊக்குவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கையின் மாணவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை Microsoft Imagine Cup 2024 வழங்குவதுடன், உள்நாட்டில் நடைபெறும் போட்டியில் கௌரவிப்பை பெறுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். நான்கு கட்டங்களைக் கொண்டுள்ள இந்தப் போட்டியின் தகைமை சுற்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது (ஜனவரி 24 நிறைவடையவுள்ளது). Minimal Viable Product (MVP) சமர்ப்பிப்புகள் சுற்று (ஜனவரி 26 – பெப்ரவரி 9), அரையிறுதி (பெப்ரவரி 23 – ஏப்ரல் 12) மற்றும் இறுதிப் போட்டி 2024 ஏப்ரல் மாதம் 26 நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago
50 minute ago
2 hours ago