Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
Macksons குழுமம், தனது சமீபத்திய வணிக முயற்சியான Macksons Tea Exports ஐ அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
இலங்கையின் பசுமையான தேயிலைத் தோட்டங்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும், Macksons Tea Exports, மிகுந்த கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் வளர்க்கப்பட்ட சிறந்த தேயிலைகளின் மகிழ்ச்சிகரமான தொகுப்பை வெளிப்படுத்தியுள்ளது.
Macksons Tea Exports இல், இலங்கைத் தேயிலையின் மகிழ்ச்சியை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாம் மிகவும் விரும்புகிறோம். வெறும் தேயிலை ஏற்றுமதியாளர் என்பதற்கு அப்பால் எமக்கு இலக்கு நீண்டுள்ளது. இலங்கையின் தேயிலை தொழிற்துறையில் மாற்றத்திற்கான வழிகாட்டியாக இருப்பதை எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம். பாரம்பரியத்தை புத்தாக்கத்துடன் கலப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கான தேநீர் அனுபவத்தை மீள்வரையறை செய்ய நாம் முயல்கிறோம். அதன் மூலமாக, இலங்கையை உயர் ரக தேயிலை உற்பத்தி மற்றும் கலாச்சார ஆய்வு மையமாக உலக வரைபடத்தில் உறுதியாக இடம்பெறச் செய்கிறோம்.
“Macksons Tea Exports மற்றும் எமது முதன்மையான தேநீர் சுவை பார்க்கும் அறையின் விமரிசையான அங்குரார்ப்பணத்தின் மூலம், இலங்கையின் பாரம்பரியத்திற்கான மேன்மை மற்றும் அர்ப்பணிப்புக்கான எமது பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். எமது தேயிலை வகைகள், எமது நிலம் மற்றும் அது உற்பத்தி செய்யும் இலங்கை தேயிலையின் அதிசிறந்த தரம் ஆகியவற்றுக்கிடையில் ஆழமான வேரூன்றியுள்ள பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்றன,' என Macksons Tea Exports இன் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜ்ஜாத் சைஹீன் குறிப்பிட்டார்.
Macksons Tea Exports தனது செயல்பாடுகளின் மையத்தில் நிலைபேற்றியல் மற்றும் நெறிமுறை பிறழாத நடைமுறைகளைத் தழுவி தன்னைத் தனித்துவமாக நிலைபெறச் செய்துள்ளது. உள்நாட்டு தேயிலை தோட்டக்காரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வலுவூட்டுவதிலும், நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதிலும், சமூக மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சுற்றுச்சூழல் நேயமான பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் பொறுப்புணர்வுடனான பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை நாம் தீவிரமாக ஊக்குவிப்பதால், சுற்றுச்சூழலின் மீதான பொறுப்புணர்வு என்பது எமது பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இலங்கையின் எதிர்காலத்திற்கான குழுமத்தின் முற்போக்கான இலக்குக்கு இணங்க, Macksons Tea Exports, மூலோபாய ஒத்துழைப்புகள் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் நாட்டின் தேயிலை தொழிற்துறையின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன சந்தைப்படுத்தல் மூலோபாயங்களின் அனுகூலங்களின் துணையுடன், இலங்கையின் பெருமையையும், தேயிலையின் மீதான பேரார்வத்தையும் பிரதிபலிக்கும் உலகளாவிய வர்த்தகநாமத்தை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு கூட்டு நிறுவனமாக, சர்வதேச அரங்கில் ஒரு அழியாத முத்திரையை பதிக்கும் அதே வேளையில் இலங்கையின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் Macksons குழுமம் தனது பொறுப்பை உணர்ந்துள்ளது. Macksons Tea Exports மூலம், நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், உலகளாவில் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்ப்பது மற்றும் இலங்கையை தேயிலைக்கு மேன்மைபெற்ற ஒரு சிறந்த நாடாக நிலைநிறுத்துவதே எமது அவாவாக உள்ளது.
மாற்றத்திற்கான இந்த பயணத்தை நாம் ஆரம்பிக்கையில், இலங்கை தேயிலையின் மகிமையை ரசிப்பதில் எம்முடன் கைகோர்க்குமாறு உலகெங்கிலும் உள்ள தேநீர் பிரியர்கள் மற்றும் கூட்டாளர்களை Macksons குழுமம் அழைக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago
7 hours ago
7 hours ago