Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 26 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, இலங்கை அரசாங்கத்துடன் (GoSL) இணைந்து, நாடு முழுவதும் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை (MSME) மீள் வலுவூட்டும் முயற்சியில், புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இக்கடன் திட்டம் MSME துறையின் திறனைக் கண்டறிந்து முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சிப் பாதையில் அதை செலுத்த ஒரு ஊக்கியாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மிகவும் சாதகமான பொருளாதார நிலைமைகளை எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த மூலோபாய ஒத்துழைப்பு உற்பத்தி, சுற்றுலா, கட்டுமானம், ஆடை மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வணிகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை மேம்படுத்த உதவும்.
இந்த கடன் திட்டத்தை பெற்றுக் கொள்ள MSMEகள், செலான் வங்கி ஊடாக விண்ணப்பிக்கலாம். இந்நிதி ஊக்கமானது, வணிக விரிவாக்கத்தை எளிதாக்குவதற்கும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் இயந்திரங்கள் (சூரிய மின்சக்தியை உருவாக்கும் அமைப்பு), உபகரணங்கள் அல்லது தளபாடங்கள் போன்ற சொத்துக்களை கையகப்படுத்துதல் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும். மேலும், புதிய அல்லது மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அறிமுகம், புதிய கட்டுமானங்கள், மேலதிக விரிவாக்கங்கள் மற்றும் வணிக மறுசீரமைப்புகளுக்கும் இக் கடனை பயன்படுத்தலாம்.
இக் கடன், அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 15 மில்லியனை கொண்டிருப்பதால் வணிகங்களுக்கு அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதிகபட்ச திருப்பி செலுத்தும் காலமாக பத்து ஆண்டுகள் மற்றும் கவர்ச்சிகரமான 7% வட்டி விகிதத்துடன், இந்த திட்டம் MSMEகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த Re-energize கடன் திட்டம், வர்த்தக சமூகத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் செலான் வங்கியின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்த முன்முயற்சி MSMEகளுக்கு நம்பிக்கையை வழங்குவதுடன், அவர்கள் புதிய உயரங்களை அடைய வழிவகுத்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago