Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 29 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
Microsoft Imagine Cup 2023இல் சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கு இலங்கையின் Sipsara மற்றும் The Green Tycoon ஆகிய அணிகள் தகைமை பெற்றுள்ளன. வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வழிமுறைகளை கட்டியெழுப்புவதற்காக Microsoft இனால் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்குரிய சர்வதேச போட்டியாக Microsoft Imagine Cup அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமது தொழில்முயற்சியாண்மை திறன்களை வெளிப்படுத்தவும், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் காணப்படும் மிகவும் சிக்கல் நிறைந்த விடயத்துக்கு தொழில்நுட்பசார் தீர்வொன்றை கட்டியெழுப்ப வழிகோலும் வகையிலும் அமைந்துள்ளது. மூன்று பிராந்தியங்களின் 48 அணிகளில் இலங்கையின் இரு அணிகளும் அடங்கியுள்ளன.
கல்விப் பிரிவில் போட்டியிட்டிருந்த SLIIT ஐச் சேர்ந்த Sipsara அணியினால், e-பயிலல் கல்விக் கட்டமைப்பு down syndrome குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. Artificial Neural Networks மற்றும் Machine Learning போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, முதலாவது இணைய அடிப்படையிலான அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக down syndrome குறைபாடுடைய சிறுவர்களின் திறன்கள் கணிப்பிடப்பட்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கு வினைத்திறனான முறையில் முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் பற்றிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
புவி எனும் பிரிவின் கீழ், SLIIT இன் Green Tycoon திட்டத்தினூடாக, CarboMeter ஒன்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனங்களுக்கு தமது காபன் இலக்குகளை கண்காணித்து, காபன் வரிகளை குறைத்து பசுமையாக திகழ்வதற்கு ஊக்குவிக்க உதவும் மொபைல் அடிப்படையிலான காபன் வெளியீட்டு முகாமைத்துவ கட்டமைப்பாக அமைந்துள்ளது.
போட்டி தொடர்பில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில், இரு அணிகளைச் சேர்ந்த மாணவர்களும் தமக்கு கிடைத்த வாய்ப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டதுடன், தமது தொழில்நுட்ப திறனை இது போன்ற சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டும் நன்றி தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
56 minute ago
3 hours ago