2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

Lumala’க்கு ஜனாதிபதி சூழல் விருதுகள் 2024 இல் கௌரவிப்பு

Freelancer   / 2024 ஜூலை 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்த சர்வதேச நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், இலங்கையர் மத்தியில் செயற்திறனான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், Lumala என அறியப்படும் City Cycle Industries Manufacturing பிரைவட் லிமிடெட், முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி சூழல் விருதுகள் 2024 இல் சூழல் பிரிவில் சிறந்த தனியார் நிறுவனத்துக்கான வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, வருடத்தில் பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட நிகழ்வாக அமைந்திருப்பதுடன், நாட்டின் சிறந்த நிலைபேறாண்மை சம்பியன்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சூழல் அதிகார சபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இராஜதந்திர சமூகத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக சைக்கிள்கள் மற்றும் e-bikeகள் ஏற்றுமதிக்காக புகழ்பெற்ற நிறுவனமாக Lumala திகழ்கின்றது. ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வில் கொண்டுள்ள தலைமைத்துவம் அதனை கொண்டுள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தாக்கமான செயற்பாடுகளினூடாக, அதன் ஒழுக்கமான மற்றும் சூழலுக்கு நட்பான நிலைபேறான உற்பத்தி செயன்முறைகளுக்கு தொழிற்துறையில் பெருமளவு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கழிவு முகாமைத்துவத்தில் காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட Eco Hauler e-bike cart குறிப்பிடத்தக்க தீர்வாக அமைந்துள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் வனாந்தர அளவை 32 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான அர்ப்பணிப்புக்கமைய, பச்சைஇல்ல வாயு வெளியேற்றங்களை 14.5 சதவீதத்தால் குறைக்கும் வகையில், நிறுவனம் தனது பரந்தளவு தீர்வு வழங்கல்களில் பங்களிப்பு வழங்க Lumala முன்வந்துள்ளது.

USAID CCBO நிகழ்ச்சித் திட்டத்துடன் The Eco-Hauler தெரிவுகள் இணைந்து, பிளாஸ்ரிக் கழிவுகளை நீக்குவதில் பெருமளவு பங்களிப்பை வழங்குவதுடன், நகர மற்றும் கரையோர பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் கழிவு சேகரிப்பில் வினைத்திறனை மேம்படுத்துவதிலும் பங்களிப்பை வழங்குகின்றது. சூழல் நிலைபேறாண்மையில் இலங்கையின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

Lumala இன் e-bike தெரிவுகள், பொருளாதார ரீதியில் சிக்கனமானதாகவும், சூழலுக்கு நட்பான வகையிலும் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வினைத்திறன், செயற்திறன் மற்றும் நீடித்த பாவனையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. அதன் Voltage edition இதற்கு வழிகோலுவதாக அமைந்திருப்பதுடன், Lumala உடன் Uber Eats கைகோர்த்து இவற்றை பயன்படுத்த முன்வந்துள்ளது. இதனால் 2023ஆம் ஆண்டில் செயற்திட்ட நிலைபேறாண்மை விருதுகளில் மெரிட் சான்றிதழை வெல்வதற்கு இது ஏதுவாக அமைந்திருந்தது.

மேலும், கடந்த ஆண்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டிலும் Eco Ride 2.0ஐ முன்னெடுப்பதற்கு Lumala முன்வந்துள்ளது. நிலைபேறாண்மை மற்றும் e-mobility தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து அடிமட்ட சூழல் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கழங்கங்களின் அங்கத்தவர்கள், மாநகர சபைகள், அமைச்சுகள் மற்றும் பரந்தளவு சைக்கிளோட்ட அணியினர் என பங்குபற்றுநர்கள் இதில் இணையவுள்ளனர்.

ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளில் புத்தாக்கமான வெளிப்பாடுகளை மேற்கொள்கின்றமை மற்றும் சூழல் முன்னெடுப்புகளுக்கான Lumala இன் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக இந்த விருது அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X