Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
LankaPay Technnovation 2024 விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கி மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டது. இலங்கையில் கொடுப்பனவு முறையில் புத்தாக்க வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதில் முன்னோடிகள் என்ற தனது நிலையை வங்கி இதன் மூலம் தக்க வைத்துள்ளது.
'டிஜிட்டல்' கொடுப்பனவுகளில் ஒட்டு மொத்த சிறப்பு செயற்பாட்டுக்காக' வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. 'வருடத்தின் மிகச் சிறந்த புத்தாக்க வங்கி' என்ற பிரிவில் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. 'சில்லறை கொடுப்பனவுகளுக்கான சிறந்த வங்கி' என்ற பிரிவிலும் தங்க விருதும், வங்கியின் QR கொடுப்பனவு செயலியான ComBank Q+ மூலம் ‘LankaQR வழியாக சில்லறை கொடுப்பனவுகளுக்கான சிறந்த கையடக்க தொலைபேசி செயலி' என்ற பிரிவிலும் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. 'வருடத்தின் சிறந்த LankaPay கார்ட் அமுலாக்கி' பிரிவில் ஒட்டு மொத்த வெள்ளி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
வங்கியின் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவில் அதன் முன்னோடி உற்பத்திகள், சேவைகள் என்பனவற்றை இந்த விருதுகள் மீண்டும் உறுதி செய்துள்ளன.
'எல்லைகள் கடந்த தூரநோக்கு' எனும் தொனிப் பொருளில் LankaPay Technnovation விருதுகள் நிகழ்வை லங்காபே தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் செயற்பாட்டாளர்களான LankaClear (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் நடத்தியது. கொழும்பு ஷங்கரி லா ஹோட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நாட்டில் முதல் தடவையாக நாடு தழுவிய ரீதியில் ATM இயந்திர வலையமைப்பை அறிமுகம் செய்த வங்கி கொமர்ஷல் வங்கியே ஆகும். (Europay, Mastercard and Visa) ஒருங்கிணைக்கப்பட்ட பரிவர்த்தனை மூலம் ATM செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. EMV பரிவர்த்தனை மூலமான சிப் கார்ட் தளத்தை முதல் தடவையாக அறிமுகம் செய்து LankaPay ATM வலைமைப்பின் ஊடாக பாதுகாப்பான EMV பரிமாற்றத்துக்கு வழியமைத்ததும் இந்த வங்கியே. வங்கியின் கார்ட்டுகளை வைத்திருப்பவர்கள் LankaPay வலையமைப்போடு தொடர்புடைய ஏனைய வங்கிகளின் ATM கார்ட்டுகளையும் இந்த இயந்திரங்கள் வழியாக மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த இது வழியமைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago