Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 27 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்நுட்பத்தினூடாக விளையாட்டுக்கு வலுவூட்டுவதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL இனால் ‘Katukurunda Speed 2023’ நிகழ்வுக்கு தொலைத்தொடர்பாடல் அனுசரணை வழங்குகின்றது. உயர் வேகம் மற்றும் நம்பகமான இணைப்பு ஆகியவற்றை நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வழங்கும் முன்னோடி சேவை வழங்குநராக திகழும் SLT-MOBITEL, தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு டிசம்பர் 3ஆம் திகதி இலங்கை விமானப் படை கட்டுகுருந்த பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது.
இலங்கை வாகன விளையாட்டு (SLAS) சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், 10 பங்காளர் கழகங்கள் இணையவுள்ளன. பல்வேறு பிரிவுகளின் முன்னணி பந்தய வீரர்களை கொண்டதாக இந்த ஆண்டின் போட்டி அமைந்திருக்கும். மேலும், SLT-MOBITEL இன் உத்தியோகபூர்வ YouTube மற்றும் Facebook செனல்கள் மற்றும் PEO TV இல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
உண்மையான தேசிய வர்த்தக நாமம் எனும் வகையில், SLT-MOBITEL ரேசிங் சமூகத்தின் பிரதான பங்காளராக திகழ்கின்றது. இந்த ஆண்டின் பங்காண்மையினூடாக, விளையாட்டுத் துறையில் திறமைசாலிகளை கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்தியுள்ளதுடன், அதற்காக தொழில்நுட்ப ஆதரவை வழங்கி, நாட்டின் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago