Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நிர்மாணப் பணிகள் நகரமயமாக்கலுடன் அதிகரித்துச் செல்வதுடன், நுகர்வோரின் மாறிவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு INSEE சீமெந்து தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கும் வகையில், தனது தயாரிப்புகளையும் தீர்வுகளையும் மேம்படுத்தி வழங்குகின்றது. இதில் INSEE சீமெந்தின் முன்னணி வர்த்தக நாமமான சங்ஸ்தா முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஐந்து தசாப்த காலமாக இலங்கையின் அதிகளவானோரின் விருப்பத்துக்குரிய வர்த்தக நாமம் எனும் நிலையை எய்தியுள்ள சங்ஸ்தா, வர்த்தக நாமம் என்பதற்கு அப்பால் சென்று, மரபுவழியில் அமைந்துள்ளது.
INSEE சீமெந்தின் சந்தைப்படுத்தல், விற்பனை, புத்தாக்கம் ஆகியவற்றின் நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், INSEE சங்ஸ்தா வர்த்தக நாமம் கடந்த காலங்களில் இதுவரை காணாதளவு பெருமளவு வரவேற்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக துறைக்கான புத்தாக்கத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக பேலியகொட பகுதியில் (i2i) Collaboration Space ஐ நிறுவியுள்ளோம். இப்பகுதியில், INSEE சங்ஸ்தாவின் வினைத்திறன், தரம் மற்றும் உள்ளம்சங்கள் ஆகியவற்றை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். வேகமான சந்தை சூழல்களுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைப்பதுடன், பொறுப்பு வாய்ந்த வகையில் திகழச் செய்ய பங்களிப்பு வழங்குகின்றோம்.' என்றார்.
பிரத்தியேக வீடமைப்பு மற்றும் கொங்கிறீற் இடலுக்காக விசேடமாக பொறிமுறைக்குட்படுத்தப்பட்ட INSEE சங்ஸ்தா, முன்னணி பிளென்ட் செய்யப்பட்ட சீமெந்தாக திகழ்வதுடன், SLS 1253 தர நிர்ணயங்களின் பிரகாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் பிரதான உள்ளடக்கமாக கிளிங்கர் அடங்கியுள்ளது. இது உயர் தர கல்சியம் காபனேற்றுடன் கலக்கப்பட்டு, சாம்பல் (Fly Ash), மண்டியுடன் (Slag) சேர்த்து தொழில்நுட்ப வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலும், சூழல் வெளிப்படுத்தல், கொங்கிறீற் செறிமானத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. Green Building Council of Sri Lanka (GBCSL) இடமிருந்து Green Labelling சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது சீமெந்து தயாரிப்பாக INSEE சங்ஸ்தா அமைந்துள்ளது. அத்துடன் Ceylon Institute of Builders (CIOB) இடமிருந்து Green Mark Gold விருதைப் பெற்றுக் கொண்ட முதல் சீமெந்து நாமமாகவும் அமைந்துள்ளது.
குனிக் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “துறையின் முன்னோடி எனும் வகையிலும், உள்நாட்டு சீமெந்துச் சந்தையில் காணப்படும் ஒரே பல்தேசிய நிறுவனம் எனும் வகையிலும், எமது தயாரிப்புகளை வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் சர்வதேச நியமங்களின் பிரகாரம் மேம்படுத்துவது பிரதான பொறுப்பாக அமைந்துள்ளது. அதனை மேற்கொள்வதற்கு, INSEE தொடர்ச்சியாக, பிராந்திய, சர்வதேச நியமங்களை இலங்கையில் அறிமுகம் செய்வதுடன், உள்நாட்டு நிர்மாண நியமங்களின் பிரகாரம் எமது வர்த்தக நாமத்தை மேம்படுத்துகின்றது என்றார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு இரண்டில் ஒரு இல்லமும் INSEE சங்ஸ்தா சீமெந்து கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோர், தொழிற்றுறை பங்காளர்களுடன் இணைந்து இந்த வர்த்தக நாமம் இயங்குவதுடன், நிர்மாணத் துறையில் எழும் சவால்கள் மற்றும் தேவைகளுக்கு துரிதமாக செயலாற்றிய வண்ணமுள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் INSEE செயலணியினர், ஒப்பந்தக்காரர்கள், மேசன்மார், பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணச் செயற்பாடுகளை முன்னெடுப்போருடன் உறுதியான உறவைக் கட்டியெழுப்பியுள்ளனர். இதனூடாக, தயாரிப்பின் எதிர்காலத்தை மேம்படுத்திய வண்ணமுள்ளது. இலங்கையில் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து நாமமாக INSEE சங்ஸ்தா திகழ்கின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி எனும் கொள்கைக்கு பங்களிப்பை வழங்குகின்றது.
இலங்கையின் நிர்மாணப் பகுதிகளில் காணப்படும் கட்டுமான செயற்பாட்டாளர்கள் நவீன துல்லியமான நிர்மாண முறைகளுக்கு மாறாக பாரம்பரிய மேசன் முறைமைகளையும் அளவிடும் சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர். சீமெந்துக் கலவைக்கு அதிகளவு நீர் சேர்ப்பதனூடாக சீமெந்துக் கலவையை இலகுவாக பூசிக் கொள்ள முடியும் என்பதில் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது செலவீனம் நிறைந்த, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானமாகும். சீமெந்துக் கலவையில் அளவுக்கதிகமாக நீரை சேர்ப்பதன் காரணமாக அதனை இலகுவாக பூசிக் கொள்ள முடிகின்ற போதிலும், கொங்கிறீற்றின் வலிமை மற்றும் நீடித்த உழைப்பை குறைத்துவிடும். மேலும், காலப்போக்கில் வெடிப்புகள், இடைவெளிகள் ஏற்படல் போன்ற சிக்கல்களும் ஏற்படும். மேலும், கொங்கிறீற் கலவைக்கென நியம அளவீடு காணப்படும் நிலையில், அளவுக்கதிமாக நீர் சேர்ப்பதால் பிரிப்பு, கொங்கிறீற் கடினமடைவதில் முறையற்ற நிலை போன்றன எழும்.
பயன்படுத்தவும், பூசிக் கொள்ள இலகுவாக அமையும் வகையில் நுண்ணிய உள்ளம்சங்களைக் கொண்டு INSEE சங்ஸ்தா தயாரிக்கப்படுகின்றது. இந்த உள்ளம்சங்கள், திரவமாக செயலாற்றுவதுடன், நீருக்கான தேவையை குறைக்கின்றது. இதில் காணப்படும் நுணுக்கமான உள்ளம்சங்களின் காரணமாக ஐ INSEE Nளுநுநு சங்ஸ்தா சீமெந்து, அடர்த்தியான உறுதியான கொங்கிறீற் கலவையை தயாரிக்க உதவியாக அமைந்திருப்பதுடன், உருக்கு இரும்புகளை பேணுகின்றது. இன்றைய துரித நிர்மாணச் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதியில், INSEE சங்ஸ்தா பொருத்தமான தெரிவாக அமைந்திருப்பதுடன், முதலீட்டின் மீது முற்கூட்டியே வருமானத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
INSEE சங்ஸ்தா சீமெந்தின் தொடர்ச்சியான மேம்படுத்தல் காரணமாக, கொங்கிறீற் மற்றும் மேசன் பணிகளில் உயர் வினைத்திறனை உறுதி செய்து கொள்ள முடிகின்றது. சீமெந்தின் வர்ணத்தினால், வலிமையை அளவிட முடியாத போதிலும், INSEE சீமெந்தின் ஆய்வாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் இதன் வர்ணத்தை கடுமையானதாக மாற்றியமைத்துள்ளனர். இது உள்நாட்டு நுகர்வோரின் பாரம்பரிய தெரிவுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் நிலையான மீளாய்வின் போது, INSEE சங்ஸ்தா தொடர்ச்சியாக உள்நாட்டு நிர்மாணத் துறையின் சூழல் தாக்கத்தையும் காபன் வெளியீடுகளை தணிக்கும் வகையிலும் பங்களிப்பு வழங்குகின்றது. இதனூடாக நிலைபேறான சிறந்த நிர்மாண செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், ஐNளு INSEE நுநு சீமெந்து நாமத்தைக் கொண்டுள்ள நிர்மாணங்களுக்கு நீண்ட கால பெறுமதியை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago