2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

‘HELLO AI’ஐ SLT-MOBITEL அறிமுகம்

Freelancer   / 2025 மார்ச் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளைஞர்களுக்கு artificial intelligence மற்றும் கல்விசார் கட்டமைப்புகளை அணுகுவதற்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான AI-மையப்படுத்தப்பட்ட மொபைல் பக்கேஜான 'Hello AI' ஐ SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிமுகத்தினூடாக, AI பயிலல் சாதனங்களை அணுகும் வாய்ப்பு, அடுத்த தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, இன்றைய வேகமான உலகில் நிலைத்திருப்பதற்கு வழிகோலியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான பிரதி அமைச்சர் பொறியியலாளர். எரங்க வீரரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL இன் Hello AI பக்கேஜ், அரசாங்கத்தின் தேசிய தொலைநோக்குப் பார்வை மற்றும் டிஜிட்டல் மாற்றம் மற்றும் AI ஏற்றுக்கொள்ளல் பயணத்துடன் பொருந்துவதாக அமைந்துள்ளது. உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இலங்கை முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இது போன்ற முயற்சிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அணுகுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. AI கருவிகள் மற்றும் கல்வி தளங்களுக்கு குறைந்த விலையில் அணுகலை இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலம், இலங்கையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களுக்கான அடித்தளத்தை நாம் உருவாக்க முடியும்.” என்றார்.

முன்னணி ‘Hello AI’ பக்கேஜின் கட்டணம் ரூ. 799 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 20GB Anytime மற்றும் 20GB Nighttime என மொத்தமாக 40GB டேட்டாவை வழங்குகிறது. அத்துடன், முன்னணி AI மற்றும் கல்விக் கட்டமைப்புகளான ChatGPT, Deepseek, Claude, Copilot, Coursera, Udemy மற்றும் Canva போன்றவற்றை அணுகுவதற்காக மேலதிக 10GB ஐயும் வழங்குகின்றது. இந்த பக்கேஜ் எந்த வலையமைப்புக்கும் 200 நிமிடங்கள் இலவச அழைப்புகளை கொண்டிருப்பதுடன், இளம் பாவனையாளர்களுக்கான பரிந்த தீர்வாக அமைந்திருக்கச் செய்துள்ளது.

மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களிடையே AI-இயங்கும் கருவிகளுக்கான அதிகரித்து வரும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்காக இந்த பக்கேஜ் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. AI மற்றும் கல்வி தளங்களுக்கான பிரத்யேக 10GB ஒதுக்கீடு, பயனர்கள் தங்கள் வழக்கமான டேட்டா பயன்பாட்டைப் பற்றி கவலை கொள்ளாமல் ஆராய்ந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது. இரவு நேர டேட்டா ஒதுக்கீடு, off-peak நேரங்களில் நீட்டிக்கப்பட்ட கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதை உறுதி செய்கிறது.

அறிமுக நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் SLT-MOBITEL குரூப்பின் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “Hello AI இன் அறிமுகத்தினூடாக, SLT-MOBITEL பாரம்பரிய தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குனர் என்பதிலிருந்து, டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை செயற்படுத்துனர் என்பதாக மாற்றமடைந்துள்ளதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட AI கருவிகள் மற்றும் கல்விக் கட்டமைப்புகள் போன்றவற்றை இலங்கையின் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்குவதனூடாக, திறன் விருத்தி மற்றும் புத்தாக்கத்துக்கான வாய்ப்பை SLT-MOBITEL ஏற்படுத்துகின்றது. இந்த முயற்சி, அடுத்த தலைமுறையை AI-சார்ந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்கள் போட்டியிடவும் வெற்றிபெறவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.” என்றார்.

Hello AI மூலம், SLT-MOBITEL, 16-25 வயதுடைய இலங்கை இளைஞர்களுக்கு எதிர்கால கற்றல் மற்றும் புதுமைக்கான நுழைவாயிலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI தளங்களுக்கு சிறப்பு தரவு அணுகலை வழங்கும் இலங்கையில் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் SLT-MOBITEL, அடுத்த தலைமுறையினர் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், AI-உந்துதல் பெற்ற உலகில் போட்டித்தன்மையுடன் இருக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SLT-MOBITEL இன் Hello AI பக்கேஜ், கல்வித் திட்டங்களுக்கான AI கருவிகளைக் கண்டறியும் மாணவர்கள், திறனை மேம்படுத்த விரும்பும் இளம் தொழில் வல்லுநர்கள், AI-இயங்கும் வடிவமைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் படைப்பாற்றல் மிக்க நபர்கள் மற்றும் ஆர்வமுள்ள டிவலப்பர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை இலக்காகக் கொண்டது. இந்த புதிய பக்கேஜ், அனைத்து இளைஞர் பிரிவுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட கற்றல் கருவிகளை அணுக உதவுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X