Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களுக்கு புத்தாக்கமான தகவல் தொழினுட்ப பயிற்சிகளை வழங்கும் முகமாக MMBL-Pathfinder குழுமம், HCL TechGroup உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. டிஜிட்டல் யுகத்துக்கு திறன் மிக்க தொழிலாளர் படையொன்றை உருவாக்குவதை முக்கிய நோக்காக கொண்டு அண்மையில் Pathfinder EdTech Institute தோற்றுவிக்கப்பட்டது. பங்குடைமையின் முக்கிய அம்சமாக தொழில்துறை தேவைகளுக்கேற்ற கல்வியியல் தகைமைகளை தடையின்றி பெறும் வகையில் HCLTech Career Shaper™️ எனும் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. HCLTech இன் விதந்துரைக்கப்பட்ட பயிற்சி முறைகள், நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட பாடவிதானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் என்பனவற்றுடன் இந்த முன்னோடி திட்டமானது ஒவ்வொரு தனி நபரையும் வேலைக்கு ஆயத்தமான சாத்தியமான திறன்களைக் கொண்டவராக மாற்ற உதவுகிறது.
இந்த முன்னோடி நிகழ்ச்சி திட்டத்துக்கு அமைய யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இரண்டு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பின்னர் விஸ்தரிக்கப்படும். முதலாவது பாடநெறியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இன்னும் பல விடயதானங்களையும் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கற்றல் அணுகுமுறையானது தொழினுட்ப பாட வேளைகள், பங்கேற்பாளர்களின் நேரடி பங்கேற்பிலான செயற்பாடுகள், உலக பயிற்சி வாய்ப்புகள் என்பனவற்றோடு மாணவர்களுக்கு விரிவான மற்றும் ஆழமான கல்வி அனுபவங்களை வழங்குகிறது.
‘MMBL-Pathfinder குழுமத்துடனான எங்களது புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிலை மாற்ற கல்வியின் மூலம் சமூகங்களை அதிகாரம் உள்ளவர்கள் ஆக்கும் HCLTech இன் அர்ப்பணிப்பினை மீள வலியுறுத்துகிறது Career Shaper™️ ஐ இலங்கைக்கு கொண்டு வந்ததன் மூலம் சர்வதேச தகவல் தொழினுட்ப சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கை தகவல் தொழினுட்ப தொழில்வாண்மையாளர்களை வடிவமைக்கிறது’ எனறார் HCLTech, EdTech இன் சர்வதேச தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறினார்.
இந்த முன்னோடி திட்டமானது உயர்தரமான தொழினுட்ப அறிவை உலகெங்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற HCLTech இன் எண்ணக்கருவுக்கு அமைவாக உள்ளது. சாத்தியமான தொழில் வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தும் நிலைமாறு வேலை படையொன்றை உருவாக்கும் முகமாக 59க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னோடி தொழினுட்ப நிறுவனமாக உள்ளது.
‘Pathfinder EdTech நிர்வாகத்தின் இந்த அறிமுகமானது பிராந்தியத்தில் தகவல் தொழினுட்ப புத்தாக்கத்துக்கான கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் கனவை மேலும் பலப்படுத்துகிறது. இந்த பங்குடைமையானது திறன்மிக்க தொழில்வாண்மையாளர்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும். டிஜிட்டல் திறன்களில் பிராந்தியத்தின் தலைமை வகிக்கும் ஒரு நாடாக தன்னை மாற்றிக் கொள்ளும் இலங்கையின் கனவுக்கு இது பங்களிக்கின்றது. இலங்கையின் திறன்களில் முதலீடு செய்வதன் மூலம் நாங்கள் கல்வியை மாத்திரம் முன்னேற்றவில்லை மாறாக பொருளாதார வளர்ச்சிக்கும் புத்தாக்கத்துக்குமான வாய்ப்புகளை அதிகரிக்கின்றோம் என MMBL-Pathfinder குழுமத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான பாலசுந்தரம் கூறினார்.
HCLTech பிரசன்னம் ஆனது சாதகமான முறையில் விரிவடைந்து இருக்கிறது. இந் நிறுவனமானது அதன் பாரிய சேவை நிறுவனத்தை கொழும்பில் உள்ள The Cinnamon Life வளாகத்தில் நிறுவியுள்ளது. அத்துடன் இலங்கையை பிராந்தியத்தின் தகவல் தொழினுட்ப கேந்திர நிலையமாக மாற்றும் வகையில் டிஜிட்டல் பிரயோகங்கள், முறைமை உள்ளடக்கம், உற்பத்தி மேம்பாடு, மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு என்பனவற்றில் கவனம் செலுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .