Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 01 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா, Google Business Messagesகளுடன் ஒருங்கிணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
எயார்டெல்லில் ஒத்துழைப்புக்களை அல்லது தகவல்களைத் தேடும் எவருக்கும், இந்த சேவை நேரலையில் (Live) இருப்பதால், புதிய அம்சமான Google Maps மற்றும் Google Searchஇல் செய்தி Buttonஐ Click செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சமானது ஒரு வாடிக்கையாளர் எண்ணைத் தேடுவதற்கு எடுக்கும் நேரத்தை நீக்குகிறது, தகவலுக்காக ஒரு தொடர்பு மையத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதனால் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்த தளங்களுக்கான அணுகல் BOTஇன் ஒருங்கிணைப்பால் மேலும் மேம்படுத்தப்பட்டு இது எதிர்காலத்தில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தானியக்க செயற்பாடானது பயனர்களின் தேவைகளை அடையாளம் காணவும், எயார்டெல்லின் தகவல் தளங்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக குறைவான மனித குறுக்கீடுகளுடன் தீர்வுகளை வழங்கவும் முடியும்.
“எயார்டெல் தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கலில் முதலீடு செய்துள்ளது, இதனால் இது சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்கு வழிவகுக்கிறது. Google Business Messagesகளை, விரிவடைந்துவரும் எமது வாடிக்கையாளர் தொடர்பு புள்ளிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் எங்களை தொடர்புகொள்ள மற்றுமொரு வசதியான புதிய Channelஐ வழங்கி இலங்கையில் தற்போது முதல்வராக இருப்பதில் பெருமையடைகிறோம்.”
“அடுத்த தலைமுறைக்கான இணைப்பை நாங்கள் வைத்திருப்பதால் இந்த அணுகல் எளிதானதும் சரியான திசையில் ஒரு படியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்.” என எயார்டெல்லின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆஷீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
Google Business Messageஇன் அறிமுகமானது எயார்டெல்லின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தளங்களான Facebook Messenger மற்றும் தொலைத்தெடர்பின் இணையத்தளத்தில் நேரடியாக அளவளாவும் (Chat) செயல்பாடு ஆகியவையும் அமையும். எயார்டெல் பின்னர் WhatsApp, Viber, Telegram மற்றும் Twitter போன்ற வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago