2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

Ex-Pack சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

Freelancer   / 2024 மார்ச் 22 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக திகழும் Ex-Pack Corrugated Cartons PLC, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "Inspire Inclusion" நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பெண்களுக்கு வலுவூட்டலுக்கான நிறுவனத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, இந்த ஆண்டின் சர்வதேச தொனிப்பொருளுக்கமைவாகவும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த தினத்தன்று நிபுணத்துவ மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற புகழ்பெற்ற பிரத்தியேக பயிற்றுவிப்பாளரான தீப்தி பெரேராவினால் கருத்தரங்கு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணி-வாழ்க்கை சமநிலை மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இவரின் விளக்கங்கள் அமைந்திருந்தன. தனிப்பட்ட தன்னிறைவுடன் நிபுணத்துவ வெற்றியை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கான உறுதியான நுட்பங்களை பங்கேற்றிருந்தவர்களுக்கு வழங்கியிருந்தது. ஊக்கமளிக்கும் அவரின் வெளிப்படுத்தலினூடாக, வாழ்க்கையின் சகல கட்டங்களிலும் திறன்களை பயன்படுத்தவும், சமத்துவத்தை நோக்கி நகரவும் ஊக்கமளிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் பெருமளவில் பணிக்குழுவில் இணைந்து கொள்வதுடன், ஆக்கத்திறன், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திலும் அதிகம் பங்களிப்பு வழங்குகின்றனர். எவ்வாறாயினும், இது தொடர்வதற்கு, ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. உள்ளடக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முன்மாதிரியாக இருந்து ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அனைவரும் பங்கேற்காவிடின் பாலின சமத்துவம் என்பதை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாது என்பது இந்த ஆண்டின் செயலுக்கான அழைப்பாக அமைந்திருந்தது.

தனது பெண் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இதனை Ex-Pack பயன்படுத்தியிருந்தது. பாரம்பரியமாக ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிறுவனத்துக்கும், தொழிற்துறைக்கும் அவர்கள் ஆற்றும் பங்களிப்பை பெரிதும் மதித்து வரவேற்றிருந்தது. ஒவ்வொரு தனிநபரும் தாம் பெறுமதி வாய்ந்தவராகவும், சிறந்த நிலையில் பங்களிப்பு வழங்குவதற்கு வலுவூட்டப்பட்டவராகவும் திகழ்வதற்கு ஆதரவளிக்கும் சூழலை ஏற்படுத்தி, உள்ளடக்கமான மற்றும் சமத்துவமான பணிக் கலாசாரத்தை ஏற்படுத்துவது எனும் Ex-Pack இன் பரந்த கொள்கையின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது.

பெண்களுக்கு வலுவூட்டுவது என்பது அறமுறையான மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயமாக மாத்திரமாக அமைந்திராமல், மூலோபாய ரீதியில் முக்கியமானது என்பதில் Ex-Pack நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.  அதன் DEI கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன சகல முறையிலும் பன்முகத்தன்மையை ஊக்குவித்து, திறந்த தொடர்பாடலை மேம்படுத்தி, பாகுபாடு மற்றும் ஓரவஞ்சனைகளை இல்லாமல் செய்வதாக அமைந்துள்ளது. இந்த செயற்பாட்டினூடாக, நிறுவனத்துக்கு பரந்தளவில் இயங்கவும், புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், 300க்கும் அதிகமான உறுதியான ஊழியர்கள் மத்தியில் தமது உரித்துடைமை உணர்வை கட்டியெழுப்பவும் முடிந்துள்ளது.

'Inspire Inclusion  எனும் தொனிப்பொருளில் உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் 2024 அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அதிகளவு சமத்துவ மற்றும் உள்ளடக்கமான சமூகங்களைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுடன் Ex-Pack இன் செயற்பாடுகளும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்களுக்கு வலுவூட்டுவது மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பில் நிறுவனம் தொடர்ச்சியாக காண்பித்து வரும் செயற்பாடுகளினூடாக, அதன சகல ஊழியர்களுக்கும் அதிகளவு சமத்துவமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசியாவிலும் இலங்கையிலும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக Ex-Pack Corrugated Cartons PLC தொடர்ச்சியாக தரப்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனம் ISO 9001-2015, ISO 14001-2015, FSC COC, WRAP தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், காபன் நடுநிலை சான்றிதழையும் பெற்றுள்ளது. NCE ஏற்றுமதி விருதுகள், CNCI விருதுகள், லங்கா ஸ்டார் விருதுகள், NBE விருதுகள், லங்கா CSR விருதுகள் மற்றும் கிறீன் விருதுகள் போன்றவற்றில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .