2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

Ex-Pack Corrugated Cartons PLC நிறுவனத்துக்கு காபன் நடுநிலை சான்றிதழ்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், அதற்கு எதிராக போராடுவதிலும் பங்களிப்பு வழங்கும் வகையில், Aberdeen Holdings (Pvt) Ltd இன் துணை நிறுவனமான Ex-Pack Corrugated Cartons PLC க்கு, தேசிய தூய உற்பத்தி நிலையத்திடமிருந்து (NCPC) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் காபன் நடுநிலை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக, நிலைபேறாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது.

தாம் இயங்கும் தொழிற்துறையில், காபன் நடுநிலையை எய்துவது என்பது சவால்கள் நிறைந்த விடயமாகும். இந்த சான்றளிப்பில் Ex-Pack நியமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏனையவர்களுக்கும் பின்தொடர முன்மாதிரியானதாக அமைந்துள்ளது. சிறந்த தொழிற்துறை செயன்முறைகளை பின்பற்றுவதில் Expack இன் தொடர்ச்சியான முயற்சிகளினூடாக, காபன் வெளியீடு குறைந்துள்ளதுடன், முழு செயற்பாடுகளையும் உள்வாங்கி வருடாந்த பச்சைஇல்ல வாயு (GHG) இலக்குகளை எய்துவதற்கு வழிகோலியுள்ளது.

Ex-Pack இன் வலு மற்றும் நீர் நுகர்வு, கழிவு முகாமைத்துவம், போக்குவரத்து மற்றும் இதர தொடர்புடைய நுகர்களின் அடிப்படையில் GHG மதிப்பாய்வை NCPC மேற்கொண்டிருந்தது.  MEP வடிவமைப்பு, காபன் நடுநிலை ஆலோசனை மற்றும் பசுமை கட்டிட சான்றளிப்பு சேவைகளை வழங்கும் முன்னணி சேவை வழங்குநரான Co-energi, வருடாந்தம் சான்றை பெற்றுக்கொள்வதற்கு Ex-Pack க்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியிருந்தது.

தவிசாளர் சத்தார் கசீம் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்றாவது வருடமாகவும் காபன் நடுநிலை வாய்ந்த நிறுவனமாக கௌரவிக்கப்பட்டுள்ளமை எமக்கு மிகவும் திருப்தியளிக்கின்றது. குறிப்பாக, எமது நிறுவனம் தொழிற்துறையமாக்கலுக்குட்பட்டது. நாம் எப்போதும், சூழலுக்கும், சமூகத்துக்கும் ஏற்படும் தாக்கத்தை தணித்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றோம். தற்போது, net-zero காபன் இலக்கை எய்துவதற்கு, எமது ESG அரண்களை மேம்படுத்துவதற்கான மேலதிக படிமுறைகளை மேற்கொள்கின்றோம். எனவே, இந்த கௌரவிப்பு என்பது நீண்ட காலமாக கிடைக்க வேண்டியதாக அமைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பான நிபுணர்களின் கலந்தாலோசனைக்கமைய, காபன் வெளியீடுகளை தணிப்பதற்கும், சமநிலைப்படுத்துவதற்கும் தொழிற்துறையின் சிறந்த நிலைபேறான செயன்முறைகளை Ex-Pack தொடர்ச்சியாக பின்பற்றுகின்றது.” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X