Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2024 மே 17 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த மின் சைக்கிள் நிகழ்வான Eco Ride இம்முறையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. “பிளாஸ்ரிக்களை நிர்வகிப்பது, இயற்கையை பாதுகாப்பது” எனும் தொனிப்பொருளில் விரைவில் மலைநாட்டில் Lumala Eco Ride 2.0 முன்னெடுக்கப்படவுள்ளது.
Eco Ride இல் நாடு முழுவதிலுமிருந்து பங்குபற்றுநர்கள் பங்கேற்று, நிலைபேறாண்மை மற்றும் e-போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர். இதில் கள மட்டத்தில் இயங்கும் சூழல்சார் நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கழகங்கள் மற்றும் சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாநகர சபைகள், அமைச்சுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சைக்கிளோட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் போன்ற பரந்தளவு சைக்கிளோட்ட அணிகள் போன்றன அடங்கியிருக்கும்.
Lumala வினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரந்தளவு e-bikeகளில் சைக்கிளோட்டிகள் மலைநாட்டில் 500 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்வார்கள். பாணந்துறை முதல் பெல்மடுல்ல ஊடாக ஹப்புதளை வரை முன்னெடுக்கப்பட்டு, ஹோர்ட்டன் சமவெளியினூடாக நுவரெலியாவுக்கு பயணிக்கும். பின்னர் நுவரெலியாவிலிருந்து கண்டி, கேகாலை ஊடாக கொழும்புக்கு திரும்பும்.
இந்தப் பயணத்தின் பிரதான அம்சங்களில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் பிளாஸ்ரிக்கள் சேகரிப்பு மற்றும் நகரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றன அமைந்திருக்கும்.
ஒரு வார காலப்பகுதிக்கு முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தின் போது, நிலைபேறான கழிவு முகாமைத்துவ செயன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும். குறிப்பாக, ஒற்றை பாவனை பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் வகைகள் தொடர்பிலும், ஹோர்ட்டன் சமவெளி போன்ற பகுதிகளில் சூழல் பாதுகாப்பு நிகழ்வுகள் போன்றனவும் முன்னெடுக்கப்படும். இவற்றுக்கு மேலாக, நிலைபேறான போக்குவரத்தை வலியுறுத்துவதுடன், சூழல்சார்-சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
கடந்த ஆண்டின் Eco Ride வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வினூடாக பருத்தித்துறை முதல் தெவுந்தர முனை வரை சுமார் 800 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யப்பட்டிருந்தது.
Eco Ride என்பது ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் சூழல் காப்பு பணிகளை முன்னெடுப்பதில் முன்னோடியாகத் திகழும், லுமானா என அறியப்படும், சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ட்ஷரிங் (பிரைவட்) லிமிடெட், சுற்றுலாத் துறை அமைச்சு அடங்கலாக பல்வேறு இதர நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கும் திட்டமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago
7 hours ago