2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ESOFT Metro Campus 1,500 IT புலமைப்பரிசில்களை வழங்கியது

Freelancer   / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்பத் துறையில் இலங்கையின் அடுத்த தலைமுறை திறமைகளை ஊக்குவிப்பதில் பங்களிப்பு வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் உயர் கல்வி வலையமைப்பான ESOFT Metro Campus, இலங்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த 1500 க்கும் அதிகமான மாணவர்களை தெரிவு செய்து, தகவல் தொழில்நுட்பத்தில் ஐக்கிய இராஜ்ஜிய நிலை 3 டிப்ளோமாவை தொடர்வதற்கு புலமைப்பரிசிலை வழங்க முன்வந்திருந்தது.

அண்மையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வின் அங்கமாக, கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்தவிடமிருந்து 40 மாணவர்கள் தமக்குரிய புலமைப்பரிசிலை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது. ESOFT Metro Campus இன் தவிசாளரும் குழும முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. தயான் ராஜபக்சவுடன் சிரேஷ்ட முகாமைத்துவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கல்விமான்கள்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் காணப்படும் ESOFT இன் 40 கிளைகள் மற்றும் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட போட்டிகரமான பரீட்சைகளினூடாக தரம் 10 மற்றும் 11ஐச் சேர்ந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பூர்த்தி செய்ததன் பின்னர், மாணவர்கள் நிலை 4 மற்றும் 5 உயர் தேசிய டிப்ளோமாக்களுக்கு போட்டியிட முடியும் என்பதுடன், பிரிட்டிஷ் பட்டத்தை பூர்த்தி செய்ய முடியும். இவை அனைத்தையும் 20 வயதுக்குட்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும். அதனூடாக உயர் தகைமைசார்ந்தவர்களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன், கூட்டாண்மை உலகில் உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்லலாம் அல்லது தமது தொழில்முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், மாணவர்களுக்கு தமது வழமையான பாடசாலை பாடவிதானத்துடன் உயர் கல்வியை தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு அவசியமான மாணவர் தலைமுறையினரை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்துடன் பொருந்தும் வகையில் இது அமைந்துள்ளது.

முன்னைய சுற்றை தவறவிட்ட மாணவர்கள் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை எந்தவொரு ESOFT கிளைக்கும் விஜயம் செய்து கணனி அடிப்படையிலான தெரிவு பரீட்சைக்கு தோற்றி முழு அல்லது அரை புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்ளுமாறு ESOFT அழைப்புவிடுத்துள்ளது. தேசிய, மாகாண அல்லது சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 10 இல் பயிலும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .