2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

EDEX Mid-Year Expo 2024 இன் பங்காளராக SLT-MOBITEL

Freelancer   / 2024 நவம்பர் 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கல்வி மற்றும் தொழில்நிலை விருத்தி ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் SLT-MOBITEL, EDEX Mid-Year Expo 2024 இன் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் பங்காளராக கைகோர்த்துள்ளது. இலங்கையின் கல்வி நாட்காட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருப்பதுடன், இந்நிகழ்வுக்கு SLT-MOBITEL இனால் Wi-Fi இணைப்பு வசதி வழங்கப்பட்டிருந்தது. கண்காட்சி முழுவதும் டிஜிட்டல் அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கு இதனூடாக வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் SLT-MOBITEL பிரதான செயற்பாட்டாளர் எனும் கீர்த்தி நாமத்தை மீள உறுதி செய்யும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், கல்வி மற்றும் நிபுணத்துவ விருத்தி ஆகியவற்றில் ஆதரவை வழங்கியிருந்தது. மாணவர்கள், கல்விச் சேவைகளை வழங்குபவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தமது சர்வதேச கல்வி வாய்ப்புகளை அணுகுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த கண்காட்சியினூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் முதலீடுகுளை மேற்கொள்ளும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

இந்த ஆண்டின் EDEX Mid-Year Expo இனால் இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதில் 20 வருட பூர்த்தி கொண்டாடப்படுகின்றது. சிறப்பை நோக்கிய அண்மையில் முயற்சிகளைத் தொடர்ந்து, புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் கண்காட்சி கவனம் செலுத்தியிருந்தது. மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயிலல் எதிர்பார்ப்புகளை இனங்காண்பதற்கு பரிபூரண கட்டமைப்பை வழங்கியிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், பிராந்திய மற்றும் தொழிற்பயிற்சி கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளுடன் பங்குபற்றுநர்களுக்கு ஈடுபாட்டை பேண முடிந்தது. Expo இனால் இலவச தொழில்நிலை வழிகாட்டல், உளவியல் பரிசோதனைகள் மற்றும் EDEX Think Green Initiative போன்ற நிலைபேறாண்மை செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அணுகல் மற்றும் EDEX Nenapahana Community Outreach நிகழ்ச்சிக்கான அணுகல் ஆகிய வசதிகளை வழங்கியிருந்தது. வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தலைவர்களுக்கான EDEX Entrepreneur Zone போன்றவற்றுக்கான ஆதரவும் வழங்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பத்தினால் எவ்வாறு பயிலலை மாற்றியமைக்க முடியும் என்பது வெளிப்டுத்தப்பட்டு, உத்தியோகபூர்வ 'ICT Solutions Partner' ஆக SLT-MOBITEL இனால் இந்த வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு, கல்வியில் காணப்பட்ட டிஜிட்டல் பாகுபாடு இடைவெளி நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. பெருமளவு உள்ளடக்கமான கல்விசார் கட்டமைப்புகளை உருவாக்குவதில் நவீன ICT தீர்வுகள் எவ்வாறு செயலாற்றும் என்பதை EDEX உடனான பங்காண்மை வெளிப்படுத்தியுள்ளது. கண்காட்சியுடன் SLT-MOBITEL இன் ஈடுபாடு எனபது, மேம்படுத்தப்பட்ட இணைப்புவசதி மற்றும் அணுகல் திறன் போன்றவற்றினூடாக இலங்கையின் மாணவர்களை டிஜிட்டல் யுகத்துக்கு தயார்ப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உத்வேகமளிப்பதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X