2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

Demak உடன் Folory Care நிறுவனம் கூட்டிணைவு உடன்படிக்கை கைச்சாத்து

Freelancer   / 2022 மார்ச் 07 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

Demak Lanka (Pvt) Ltd, நிறுவனம் Folory Care (Pvt) Ltd தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைவு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. TOTAL Lubricant Engine oil, Fork oil, Greage Hydraulic oil போன்ற சகல வகையான ஒயில்களையும் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விநியோகிக்கும் அங்கீகாரம் பெற்ற ஏக முகவர் நிறுவனமாக Folory Care தனியார் நிறுவனம் திகழ்கின்றது.

Demak மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்கும் நிறுவனமான Demak Lanka (Pvt) Ltd> நிறுவனம், Folory Care தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான TOTAL Lubricant எஞ்ஜின் ஒயிலை விநியோகிக்கும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய Demak Lanka (Pvt) Ltd> நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி துஷார பெரேரா குறிப்பிடுகையில், 'வாகன பராமரிப்பு சேவைக்காக TOTAL Lubricant எஞ்ஜின் ஒயிலை நாடு முழுவதும் விநியோகிக்கும் Folory Care தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. சிறந்த சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் ஒரு நிறுவனத்துடன் கூட்டிணைந்து செயற்படுவது மகிழ்ச்சியான விடயம். நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக மோட்டார் வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் எமது வாடிக்கையாளர்களக்கான விற்பனைக்குப் பின்னரான சேவையை நாம் தொடர்ந்து வழங்கி வருகின்றோம். எந்த மாதிரியான (Any model) அத்தோடு பழைய மோட்டார் சைக்கிள்களை புதுபித்து, மெருகூட்டி தரமான உறுதியான மோட்டார் சைக்கிள்களை சேர்விஸ் செய்து கொடுக்கும் சேவையை தற்போது Demak நிறுவனம் 165, Church Cross Lane, வத்தளை என்ற முகவரியில் வழங்கி வருகிறது. அவ்வாறான சேவையை மேலும் சிறப்பாக வழங்கும் நோக்குடனேயே Total Folory Care நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளோம்.' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .