Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 31 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
Daraz, தெற்காசிய பாவனையாளர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட சொப்பிங் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், “AskDaraz” எனும் AI ChatBot ஐ அறிமுகம் செய்வதற்காக Microsoft Azure OpenAI சேவையை பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. OpenAI’ இன் ChatGPT இனால் வலுவூட்டப்பட்ட AskDaraz, இனால் பாவனையாளர்களுக்கு AI chatbot உடன் கலந்துரையாடி, பிரத்தியேகமான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், முழு சொப்பிங் அனுபவத்தையும் சீராக்கிக் கொள்ள முடியும்.
தெற்காசிய பிராந்தியத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களால் Daraz பயன்படுத்தப்படுகின்றது. Azure OpenAI சேவை மாதிரியை Daraz இன் புதிய இனங்காணல் பிரிவினுள் உள்வாங்கியுள்ளதனூடாக, e-வணிக கட்டமைப்புடன் இதுவரையில் தொடர்புகளை பேணியிராத பாவனையாளர்களுக்கு விசேடமாக உள்ளடக்கமான சொப்பிங் அனுபவம் ஏற்படுத்தப்படும். “AskDaraz” இனால் Daraz இல் சொப்பிங் அனுபவம் மேம்படுத்தப்படுவதுடன், பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள மில்லியன் கணக்கான தயாரிப்புகளிலிருந்து தேவையானதை பரிந்துரைப்பது, பொருட்களை, நவநாகரீக முறைகளை மற்றும் தெரிவுகளை பாவனையாளர்களின் தேவைக்கமைய பரிந்துரைப்பது போன்றன ஏற்படுத்தப்படும். ஒன்லைன் மற்றும் ஓஃவ்லைன் சொப்பிங் அனுபவத்தில் காணப்படும் இடைவெளியான, பாவனையாளர்கள் பழக்கப்பட்டுள்ள அதிகளவு உரையாடல்களுடன் மற்றும் ஈடுபாட்டுடனான அனுபவத்தை உயர் தரத்தில் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தச் சேவை அமைந்திருக்கும்.
Daraz கட்டமைப்பிலுள்ள வர்த்தக நாமங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் “AskDaraz” இனூடாக பயன் பெறக்கூடியதாக இருக்கும். இதனூடாக தயாரிப்பு தோற்றப்பாடு மேம்படுத்தப்பட்டு, புதிய வாடிக்கையாளர்களை அணுகக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும். பாவனையாளர்களின் ஈடுபாடுகள் அதிகரிக்கையில், Daraz இனால் தொடர்ச்சியாக, AI சீராக்கம் செய்யப்படும். தெற்காசியாவில் காணப்படும் நாடுகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் காணப்படும் மொபைல் பாவனையாளர்கள் 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 மில்லியனாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதனூடாக புதிய பாவனையாளர்களில் நான்கில் மூன்று மடங்குக்கு அதிகமானவர்கள் இவர்களாக இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், e-வணிகம் சாராத பாவனையாளர்களுக்கான அணுகலை வழங்குவதால் இந்த புதிய உள்ளடக்கமான சொப்பிங் அனுபவத்தினூடாக, துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.
Daraz Group, பிரதம நிறைவேற்று அதிகாரி பிஜார்கே மிக்கெல்சன் கருத்துத் தெரிவிக்கையில், “வணிகத்தின் வலிமையினூடாக சமூகங்களை மேம்படுத்துவது எமது நோக்காகும். புதிய சந்தைப் பிரிவை திறக்க தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும் நிலையில் இது எமக்கு பிரதான மைல்கல்லாகும். எமது சந்தைகளில் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது மற்றும் எமது app இல் Microsoft Azure OpenAI சேவை போன்றன "AskDaraz” ஐ பலரை எம்முடன் தொடர்புகளை பேணி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு தூண்டும். தெற்காசியாவின் e-வணிகக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் உரையாடல்களுடனான மற்றும் பிரத்தியேகமான அனுபவத்தை இணைய பாவனையாளர்கள் பெறக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
Microsoft APAC பிரதம தொழில்நுட்ப அதிகாரி டியோமெடெஸ் கஸ்டானிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “Microsoft Azure OpenAI சேவையுடன் தெற்காசியாவின் விற்பனை பிரிவில் மாற்றியமைக்கும் Daraz இன் பயணத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். e-வணிக கட்டமைப்பில் முன்னோடிகளில் ஒன்றாகத் திகழும் Daraz, தயாரிப்பு சென்றடைவு, வாடிக்கையாளர் ஈடுபாட்டை விரிவாக்கம் செய்தல் மற்றும் ஒட்டுமொத்த தன்னிறைவு மட்டங்களை மேம்படுத்தல் போன்றவற்றினூடாக, 30 மில்லியன் வாடிக்கையாளர்களின் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்தவுள்ளது. அத்துடன், app இனுள் தனது ஒன்றிணைக்கப்பட்ட 'Discover' உள்ளம்சத்தினூடாக புதிய வாடிக்கையாளர் பிரிவுகளில் பிரவேசிக்கவும் எதிர்பார்க்கின்றது. விற்பனையாளர்கள் மற்றும் eவணிக கட்டமைப்புகளுக்கு புத்தாக்கத்தை துரிதமாக ஏற்படுத்துவதிலும், AI சக்தியுடன் வாடிக்கையாளர் அனுபவங்களை பிரத்தியேகமானதாக மாற்றியமைப்பதிலும் உதவும் அடுத்த படியாக இது அமைந்திருக்கும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago