2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

DFCC வங்கிக்கு இரண்டு சிறப்பு விருதுகளுடனான அங்கீகாரம்

S.Sekar   / 2022 ஏப்ரல் 29 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

DFCC வங்கி, அண்மையில் இடம்பெற்ற 2020/2021 ஆம் ஆண்டிற்கான LankaPay Technnovation Awards 2022 விருதுகள் நிகழ்வில் இரண்டு புதிய விருதுகளைத் தனதாக்கியுள்ளது. வங்கியானது ‘Best Common ATM Enabler of the Year under category B’ மற்றும் ‘Bank of the Year for Financial Inclusivity under category C’ ஆகிய அங்கீகாரங்களைத் தனதாக்கியுள்ளது. அனைவரையும் உள்வாங்கும் வகையிலான கடன் வசதிகளை முன்னெடுத்து வருகின்றமை, நிதிச் சேவைகள் துறையில் அதன் உயர் செயல்திறன் காரணமாக CEFTS, SLIPS மற்றும் பொதுவான ATM புழக்கத்தை ஊக்குவிக்கும் நடைமுறை பரிவர்த்தனைகள் காரணமாக இந்த அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கும் வகையிலான வங்கியின் பல்வேறு முயற்சிகள் மற்றும் அதன் வங்கிச்சேவை வசதிகள் கிடைக்கப்பெறுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த புத்தாக்கமான டிஜிட்டல் மயமாக்கல் அடிப்படையிலான நடைமுறைகளைப் பயன்படுத்துவதில் அனைத்து பங்குதாரர்களுக்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த அங்கீகாரங்கள் புலப்படுத்துகின்றன. கொவிட்-19 தொடர்பான அனைத்து சிறந்த நடைமுறைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதில் DFCC வங்கியின் முயற்சிகள், DFCC MySpace ATM கள் கிடைக்கப்பெறுவதை விரிவுபடுத்துவதற்கான அதன் குறித்த இலக்குடனான தகவல்தொடர்பாடல்களுடன், பொதுவான ATM புழக்கத்தின் பயன்பாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன. மேலும், DFCC Virtual Wallet ஐச் செயல்படுத்துவதில் DFCC வங்கியின் விரிவான பணியானது, DFCC iConnect மற்றும் DFCC Pay பயன்பாடுகளுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தினசரி பரிவர்த்தனை வங்கித் தேவைகளை எளிதாகவும் செயல்திறனுடனும் செய்ய உதவியுள்ளது. Bank of the Year for Financial Inclusivity என்ற பிரிவின் கீழ் அங்கீகாரத்தை சம்பாதிப்பதற்கு அதுவே மூல காரணம்.

நான்காவது முறையாக இடம்பெற்றுள்ள LankaPay Technnovation Awards நிகழ்வானது இலங்கையின் முன்னோடி கொடுப்பனவு தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் நிகழ்வாகும். 2022 மார்ச் 29 அன்று கொழும்பிலுள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் இது நடைபெற்றதுடன், நாட்டின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் செயல்படுத்துனரான LankaClear ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த Technnovation விருதுகள், நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவு பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தீவிரமாக உழைத்து, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்துவதற்காக, நாட்டில் கொடுப்பனவுத் தொழில்நுட்ப புத்தாக்கங்களில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை.

வங்கியின் சாதனைகள் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “DFCC வங்கியானது சமீபத்திய LankaPay Technnovation விருதுகளில் ஒன்றல்ல, இரண்டு விருதுகளை வென்றுள்ளதில் மிகுந்த பெருமை கொள்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கான மதிப்பை உருவாக்குவதில் எங்களின் விரிவான முயற்சிகள் இந்த அங்கீகாரங்களின் மையமாக உள்ளன. இது வாடிக்கையாளர் சேவையின் சிறந்த மட்டங்களை உறுதிசெய்ய டிஜிட்டல் மயமாக்குவதற்கான எங்கள் முயற்சிகளின் வெற்றியையும் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் திருப்தியையும் வெளிப்படுத்துகிறது. நிதி உள்ளடக்கத்தை உருவாக்க முயற்சிப்பதன் மூலம், நமது நாட்டின் பொருளாதார மீள்எழுச்சித்திறனை நிலைநாட்டுவதற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். மேலும் iConnect மற்றும் DFCC Virtual Wallet போன்ற எங்கள் புத்தாக்கமான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் உருவாக்கிய குறிப்பிடத்தக்க மதிப்பு மற்றும் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை அவர்கள் எவ்வாறு மேம்படுத்தினார்கள் என்பதற்காக, இத்தகைய விருது வழங்கும் ஒரு அமைப்பிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளமை மிகுந்த திருப்தியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், DFCC வங்கியின் விரிவான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, விரிவான, எதிர்காலத்தை நோக்கிய நிலைபேற்றியல் மூலோபாயத்தின் துணையுடன், அனைத்து பங்குதாரர்களையும் புதிய உச்சங்களை எட்டுவதன் மூலம் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. இந்த பாராட்டுகளை அடைவதற்கு அவையே களம் அமைத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .