2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘CubKit’ அறிமுகத்துக்காக BaseKit Platform UK உடன் SLT-MOBITEL கைகோர்ப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வலுவூட்டுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் BaseKit Platform Limited உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒவ்வொரு வியாபாரத்துக்கும் டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டி, இலங்கை சந்தைக்கு பொருத்தமான புத்தாக்கமான புதிய சேவைகளை பெற்றுக் கொடுக்கும் SLT-MOBITEL இன் நோக்கத்துக்கமைவானதாக BaseKit உடன் கைகோர்த்து CubKit ஐ அறிமுகம் செய்வது அமைந்துள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு சுயமாக இணையதள வடிவமைப்பு ஆற்றல்களை வழங்குவதனூடாக, தரமான இணையதள வடிவமைப்பு மற்றும் e-வணிக அணுகலை ஏற்படுத்திக் கொடுக்க SLT-MOBITEL எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் மாற்றியமைப்பு மற்றும் e-வணிக பின்பற்றலை துரிதப்படுத்தவும் எதிர்பார்க்கின்றது.

SLT-MOBITEL இன் MSME Product Development அணியானது, BaseKit Platform Limited உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதனூடாக, இலங்கை சந்தையில் தீர்வுகளை அறிமுகம் செய்து விநியோகிக்க முன்வந்துள்ளது. நுண், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு தற்போது சகாயமான, முழுச் சேவையாற்றல் கொண்ட இணையத்தள வடிவமைப்பு வசதியின் பயனை அனுபவிக்க முடியும். இலங்கை முழுவதிலும் SLT-MOBITEL'இன் விநியோக ஆற்றலினூடாக இதனை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் BaseKit Platform Limited இன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சைமன் பெஸ்ட், மெய்நிகரான முறையில் இணைந்து கொண்டார். SLT-MOBITEL குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, SLT-MOBITEL பிரதான பணிப்பாளர் சபை அறையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். Basekit இன் வியாபார அபிவிருத்தி நிறைவேற்று அதிகாரி கார்ல் கில் மெய்நிகரான முறையில் இணைந்து கொண்டார்.

SLT இன் சிரேஷ்ட அதிகாரிகளான SLT-MOBITEL குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க, Enterprise and SME தயாரிப்புகள் பொது முகாமையாளர் செல்வேந்திரன் வித்யாபன், Micro & SME Product Development & Management பிரதி பொது முகாமையாளர் ரவின் தரிந்திர, MSME Product Development சந்தைப்படுத்தல் முகாமையாளர் சமிளா தர்மசேன, Engineer MSME Product Development மதுகா பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CubKit Web Builder என்பது BaseKit web builder இன் மீளமைக்கப்பட்ட வெளியீடாக அமைந்துள்ளது. இதனை hostingcub.com இனூடாக பெற்றுக் கொள்ளலாம். பாவனையாளருக்கு நட்பான உள்ளமைப்பு, booking engines உடனான ஒப்பற்ற ஒன்றிணைப்பு, வாடிக்கையாளர்களுக்கு தமது சொந்த கொடுப்பனவு கேட்வேகளை ஒன்றிணைக்கும் வசதி, SEO optimization tool மற்றும் unlimited bandwidth உடன் unlimited hosting space போன்ற வசதிகளை வழங்குகின்றது.

SLT-MOBITEL’இன் புதிய தயாரிப்பு ‘CubKit’ ஊடாக, உயர்மட்ட தகவல் தொழில்நுட்ப திறனுக்கான அவசியமின்றி, drag-and-drop இணையத்தள வடிவமைப்பு வசதியை வழங்குகின்றது. இதனால் வியாபாரங்களுக்கு வேகமாகவும், இலகுவாகவும் இணைய பிரசன்னத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது இலங்கையில் காணப்படும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த tool இனூடாக, வியாபாரங்களுக்கு உறுதியான ஒன்லைன் பிரசன்னத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவசியமான உள்ளம்சங்கள் வழங்கப்படுவதுடன், வியாபார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இந்த கைகோர்ப்பினூடாக, டிஜிட்டல் மயமாக்கம் என்பது தொடர்பான உறுதியற்ற MSME உரிமையாளர்களுக்கு, SLT-MOBITEL இன் நம்பிக்கையை வென்ற பங்காண்மை காணப்படுவதுடன், ஒன்லைனில் Basekit இன் கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும். அதனூடாக அவர்களுக்கு புதிய வருமான மூலங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும், தமது ஒன்லைன் வர்த்தக நாமம் மற்றும் செயற்பாடுகளில் கட்டுப்பாட்டை பேணுவதற்கும் உதவியாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .