Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ComBank Digital இன் பயனாளிகள், வங்கியினால் 2025 ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் தளத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் தாய்லாந்திற்கான விமான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது.
குறித்த ஒரு மாதத்தில் ComBank Digital இல் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடையே சீட்டிழுப்பு குலுக்கல் முறையில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு விமான டிக்கெட்டுகள் என்ற ரீதியில் ஒவ்வொரு மாதமும் கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படவுள்ளன. இந்த சீட்டிழுப்பு குலுக்கல் முறைக்கு தகுதிபெறுவதற்கு, பரிவர்த்தனைகள் மூன்று பயன்பாட்டு பில் பட்டியல்கள் மற்றும் மூன்று நிதி பரிமாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஊக்குவிப்பு திட்டமானது லங்காபேயுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
'ComBank Digital ஏற்கனவே மாதாந்தம் சராசரியாக 5 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகின்ற போதிலும் அதற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கான திறனைக் கொண்டுள்ளது,' என்று கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச தெரிவித்தார். 'அதிகரித்த பயன்பாடு எங்கள் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது, எங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த வங்கி அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்து, பாரம்பரிய வங்கியிலிருந்து டிஜிட்டல் வங்கிக்கு மாறுவதால், அவர்களின் நிதியியல் முகாமைத்துவத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது.'
ComBank டிஜிட்டலின் 'பரிவர்த்தனை செய்து வெல்லுங்கள்' ஊக்குவிப்பு திட்டத்தின் டிசம்பர் மாத வெற்றியாளர் திருமதி மல்ஷா தில்மி ஆவார், அவர் ஏற்கனவே தாய்லாந்திற்கான டிக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.
கொமர்ஷல் வங்கியின் ‘Digital by Default’ வர்த்தக மாதிரியால் செயற்படுத்தப்படும், ComBank Digital ஆனது 1.5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ.400 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. சில்லறை விற்பனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SME) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவதற்காக மிகவும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளமான, ComBank Digital ஆனது பதிலளிக்கக்கூடிய இணைய பயன்பாடு மற்றும் மூன்று சொந்த மொபைல் பயன்பாடுகள் (iOS, Android மற்றும் Huawei) மூலம் வழங்கப்படுகிறது. மேசை கணினிகள், மடிக் கணினிகள், டப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற அனைத்து சாதனங்களிலும் அணுகலுடன், வங்கித் தேவைகள், செல்வ முதலீடு, பணம் செலுத்துதல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற செயல்பாடுகளை இது உள்ளடக்கியது.
புதிய வாடிக்கையாளர்கள் ComBank Digital ற்கு முதல் ஆண்டு வருடாந்த கட்டணம் அல்லது அனுமதி கட்டணம் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம், இதனால் அவர்கள் இணையற்ற வசதியை அனுபவிக்க முடியும். பரந்த அளவிலான புதிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் சலுகைகளை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago