2025 மே 06, செவ்வாய்க்கிழமை

Cinnamon மழைக்காடுகள் மறுசீரமைப்பு செயற்திட்டம்

S.Sekar   / 2022 மே 09 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

Cinnamon Hotels & Resorts தனது பிந்திய நிலைபேறாண்மை செயற்திட்டமான “Cinnamon மழைக்காடுகள் மறுசீரமைப்பு செயற்திட்டம்” என்பதை Ruk Rakaganno (இலங்கை மரங்கள் பாதுகாப்பு சங்கம்), இலங்கை வனாந்தர திணைக்களம் மற்றும் ஜோன் கீல்ஸ் மையம் ஆகியவற்றுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக மூன்று வருட காலப்பகுதியில் 50 ஏக்கர் சேதமடைந்த மழைக்காடுகளை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். இயற்கை வனாந்தர மீள் வளர்ச்சி என்பது சர்வதேச ரீதியில் சாத்தியக்கூறான காலநிலை மாற்ற தீர்வாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் உயிரியல் பரம்பல் தொடர்பில் புதிய யுகத்தில் ஆரம்பித்து வைப்பதாக அமைந்திருக்கும்.

Ruk Rakaganno அமைப்பின் தலைவர் துஷி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் “Ruk Raks” (மரப் பாதுகாவலர்கள்) இந்த கைகோர்ப்பின் பிரதான இலக்காக சிங்கராஜ வனாந்தரப் பகுதியில் ஈர வலயத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் 50 ஏக்கர் மழைக்காடுகள் பகுதியை மறுசீரமைப்பதாக அமைந்துள்ளது.  இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துக்கு ஜோன் கீல்ஸ் மையம் நிதிப் பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ளமைக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்த 50 ஏக்கர் பகுதி காணப்படுகின்றது. நாட்டில் எஞ்சியிருக்கும் சில இயற்கை வனாந்தரங்களில் ஒன்றான சிங்கராஜா வனாந்தரத்தில் UNESCO உலக மரபுரிமை பாரம்பரிய பகுதியாக கருதப்படும் உயிரியல் பரம்பல் காணப்படும் பகுதியிலிருந்து சுமார் 3.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்து. 50 ஏக்கர் பகுதியை மறுசீரமைப்பது மற்றும் மீளமைப்பது என்பதனூடாக பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ள இப்பிராந்தியத்தின் உயிரியல் ரீதியான முக்கியத்துவத்தை மேலும் வளமூட்டுவதாக அமைந்திருக்கும். “Cinnamon மழைக்காடுகள் மறுசீரமைப்பு செயற்திட்டம்” இனால் உயிரியல் பரம்பலை பாதுகாப்பது தொடர்பில் பணியாற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பணியாற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருத்தமான முன்மாதிரியான செயற்பாடாக அமைந்திருக்கும்.

Cinnamon Hotels & Resorts ஐச் சேர்ந்த ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கான ஊக்குவிப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஜோன் கீல்ஸ் மையத்தின் சார்பாக சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கராஜ வனாந்தரப் பகுதியைச் சூழவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நிதியளிப்பு எனும் எமது அர்ப்பணிப்புக்கு மேலதிகமாக, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன், சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்த எதிர்பார்க்கின்றோம். அவர்களினூடாக சேதமடைந்த தாவரங்களை அகற்றுவது மற்றும் தாவரச் செய்கையை மேற்கொள்வதற்கு மண்ணைத் தயார்ப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையினூடாக செயற்திட்டத்தின் உரிமையாண்மை தொடர்பான உணர்வு தூண்டப்படுவதுடன், மறுசீரமைப்பு தொடர்பில் ஊழியர்களுக்கு தன்னிறைவை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

செயற்திட்டத்தின் ஈடுபாட்டு திட்டங்களின் அங்கமாக, Cinnamon properties இன் விருந்தினர்களை பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை செயற்பாட்டாளர்களால் இந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் நோக்கம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும். மரமொன்றை நட விரும்பும் விருந்தினர்களுக்கு கையிருப்பிலுள்ள தாவரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றி அறிவிக்கப்படும். அதற்கான செலவை குறித்தி விருந்தினர் ஏற்க வேண்டும். சிறிய குன்று ஒன்றில் ஏறியதும், அவர்களுக்கு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் பிரதேசத்தை 360 பாகையில் பார்வையிடக்கூடியதாக இருக்கும். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விருந்தினர்கள் கொள்வனவு செய்த தாவரக் கன்றை பயிரிடுவதற்கும், நீர் ஊற்றுவதற்கும் மற்றும் தாவரக் கன்றில் முத்திரை பொறிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதனூடாக காலப்போக்கில் குறித்த தாவரத்தின் வளர்ச்சியை பார்வையிடக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் இந்தத் திட்டத்துக்கு உலகளாவிய ரீதியில் காணப்படும் சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களை கவர்ந்திழுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X