Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
S.Sekar / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
Cinnamon Hotels & Resorts மற்றும் Swiss Hotel Management Academy (SHMA) ஆகியவற்றின் Cinnamon Hospitality Academy, தனது அங்குரார்ப்பண தொகுதியாக, 43 (நாற்பத்து மூன்று) மாணவர்களை வரவேற்று தனது தொழிற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
Ecole hôtelière de Lausanne (EHL) Professional Diploma வழங்கும் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (Vocational Education and Training - VET) டிப்ளோமா கற்கைநெறி மூலமாக, இலங்கையில் விருந்தோம்பல் துறை கல்விக்கு இக்கூட்டாண்மை மீள்வரைவிலக்கணம் வகுக்கவுள்ளது. விருந்தோம்பல் முகாமைத்துவத்திற்கு உலகின் முதற்தர பல்கலைக்கழகமாகத் திகழும் EHL, மாணவர்களுக்கு சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற தகைமை கிடைப்பதை உறுதி செய்து, தலைசிறந்த நிபுணத்துவத்தை இக்கூட்டு முயற்சி கொண்டுவரவுள்ளது.
இலங்கையில் எதிர்கால விருந்தோம்பல் துறை தலைவர்களுக்கு வலுவூட்டுவதில் சாதனை மைல்கல்லொன்றை Cinnamon Hospitality Academy இன் ஆரம்பம் குறித்து நிற்கின்றது. Cinnamon Hotels & Resorts பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி ஹிஷான் சிங்கவன்ச இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையில் விருந்தோம்பல் துறை தொழில் வல்லுனர்களின் அடுத்த தலைமுறையை வளர்ப்பதில் முன்னின்று செயற்பட்டு வருகின்ற எமக்கு, Cinnamon Hospitality Academy இன் அங்குரார்ப்பணம் எமக்கு பெருமைமிக்க தருணமாக மாறியுள்ளது. SHMA உடன் ஒத்துழைத்து, EHL Professional Diploma வழங்கும் VET கற்கைநெறி, நிஜ உலகின் நடைமுறைப் பயிற்சியுடன் சர்வதேச தராதரங்களை இணைக்கும் வகையில் ஒப்பற்ற கல்வி அனுபவமாக அமையும். இம்முயற்சியானது தொழில்துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுவது மாத்திரமன்றி, இப்பிராந்தியத்தில் அபிமானம் பெற்ற தொழில்தருநர் என்ற எமது ஸ்தானத்தையும் வலுப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.
Cinnamon Hospitality Academy பின்பற்றும் கற்கைநெறி, Swiss Gold Standard Framework ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், சமையல் கலை (Culinary), உணவு மற்றும் பான வகை சேவை (Food & Beverage Service) மற்றும் ஹோட்டல் தொழிற்பாடுகள் (Hotel Operations) ஆகிய மூன்று விசேட துறைகளின் கீழ் கல்வியை வழங்குகின்றது. EHL வழங்கும் VET கற்கைநெறி, Cinnamon Hotels & Resorts இன் கீழ் கொழும்பிலுள்ள அதன் ஹோட்டல்களில் இரு தினங்களுக்கு கோட்பாடு மற்றும் நடைமுறை கல்வியுடனும், நான்கு தினங்களுக்கு ‘வேலையின் போதே கற்றுக்கொள்ளும்’ (on-the-job) பயிற்சியுடனும், ‘கற்றல், பணிபுரிதல் மற்றும் உழைத்தல்’ (Learn, Work & Earn) அடிப்படையில் பணிப்பயிற்சியை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.
Cinnamon Hospitality Academy இன் ஆரம்பம், இலங்கையில் விருந்தோம்பல் கல்வியில் புதிய அத்தியாயமொன்றைக் குறித்து நிற்பது மாத்திரமன்றி, இத்துறையில் மகத்துவம், புத்தாக்கம் மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை வளர்க்கும் பரந்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago