Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 26 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, Business Today’s TOP 40 2022-2023 தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் தொழிற்துறையைச் சேர்ந்த நிறுவனமாக ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
அண்மையில் வெளியிடப்பட்ட சிறந்த 40 நிறுவன தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்ட ஒரே தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநராக SLT-MOBITEL அடங்கியிருந்தது. அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்காக கௌரவிப்பைப் பெற்றுள்ளதுடன், நிறுவனத்தின் மீட்சி மற்றும் சவால்களை கடந்து சென்றிருந்தமைக்கான கௌரவிப்பாகவும் அமைந்திருந்தது.
Business Today இன் வருடாந்த TOP 40 தரப்படுத்தல் என்பது, இலங்கையில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தொலைத்தொடர்பாடல் துறையில் பெருமைக்குரிய நிரலில் ஒன்றாக SLT-MOBITEL உள்வாங்கப்பட்டிருந்ததுடன், தேசத்தின் டிஜிட்டல் சூழலில் முக்கிய பங்கை வகிக்கின்றது.
பரந்தளவு இணைப்புத்திறனை வழங்குவது மற்றும் டிஜிட்டல் பாகுபாட்டு இடைவெளியை நிவர்த்தி செய்வது, பெருமளவு இணைப்புடன் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றத்துக்கான எதிர்காலத்துக்கு கொண்டு செல்வதற்கு புத்தாக்கமான செயற்பாடுகளை வழிநடத்திச் செல்வதற்கு SLT-MOBITEL இலங்கைக்கு உதவியாக அமைந்திருப்பதை கௌரவிக்கும் வகையில் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.
மேலும், Business Today TOP 40 தரப்படுத்தலினால் பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுடன், இதில் நிதிசார் வினைத்திறன், மூலோபாய செயற்பாடுகள் மற்றும் தொழிற்துறை போக்குகளில் தாக்கம் போன்றனவும் அடங்கியிருந்தன.
தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியிருந்த நிறுவனத்தின் பிரதான சாதனகைளயும் இந்த தரப்படுத்தல்கள் உள்வாங்கியிருந்தன. அதில் நிறுவனத்தின் ஃபைபர் வலையமைப்பு 65000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் விரிவாக்கம், ஸ்மார்ட் டிஜிட்டல் பொருளாதாரத்துக்காக உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தல், அதன் Embryo வசதியூடாக R&D ஆற்றல்களை ஊக்குவித்து, பங்காண்மைகளை கட்டியெழுப்பி, AI/ML, metaverse மற்றும் பல புத்தாக்கமான சேவைகளை அறிமுகம் செய்திருந்தது.
இலங்கையர்களுக்கு நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளினூடாக வலுவூட்டுவதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தொழில்நுட்பங்களில் முதலீடு மற்றும் வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகள் மற்றும் தேசத்தின் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய மாற்றியமைக்கத்தக்க தீர்வுகளில் பங்களிப்பு வழங்குவது போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், தொழிற்துறை, நிறுவனங்கள் மற்றும் வாழ்க்கைமுறை முன்னேற்றத்துக்கு SLT-MOBITEL வலுவூட்டுகின்றது. கிராமிய பின்தங்கிய சமூகங்களை இணைப்பது முதல், நவீன தீர்வுகளினூடாக வியாபாரங்களை மாற்றியமைப்பது வரையிலும் SLT-MOBITEL இனால் தேசிய அபிவிருத்திக்கு தனது சிறந்த இணைப்புத்திறனினூடாக பங்களிப்பு வழங்கப்படுகின்றது. பல்வேறு துறைகளுடன் கைகோர்த்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் உள்ளடக்கத்தை வலிமைப்படுத்தல் மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான தொழில்நுட்பங்களினூடாக நிறுவனசார் தீர்வுகளை வழங்கல் போன்றவற்றினூடாக இலங்கையின் முன்னேற்றத்துக்கு SLT-MOBITEL பங்களிப்பு வழங்குகின்றது. தேசம் மேம்படும் நிலையில், SLT-MOBITEL இனால் தொடர்ந்தும் தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத்திறன் போன்றவற்றினூடாக வலுவூட்டல் வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago