Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 01 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரம் இந்தியாவின் ICICI வங்கி இலங்கையில் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியிருந்ததைத் தொடர்ந்து இலங்கையில் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்த மற்றுமொரு இந்திய வங்கியான Axis வங்கி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.
இந்தியாவின் Axis வங்கிக்கு இலங்கையில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியிருந்ததைத் தொடர்ந்து, இந்தச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டில் இலங்கையில் தனது வர்த்தகச் செயற்பாடுகளைக் கொழும்பின் தலைநகர் பகுதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில், Axis வங்கியின் கோரிக்கையின் பிரகாரம், இலங்கையில் வர்த்தகச் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியதி, நிபந்தனைகளை Axis வங்கி பூர்த்திச் செய்திருந்ததைத் தொடர்ந்து, வங்கியியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய அரச வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன பல தசாப்த காலமாக இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
42 minute ago
1 hours ago