Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
Aberdeen Holdings, தனது கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடாக, சிநேஹதான அறக்கட்டளையை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக, சமூக நலன்புரிச் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்குவதற்கான நிறுவனத்தின் ஈடுபாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 3, 17ஆம் ஒழுங்கையில், சினேஹதான சமூக சமையலறையின் அறிமுகத்தினூடாக, இந்த அறக்கட்டளையின் முதலாவது பணி ஆரம்பமாகியது. தற்போதைய நெருக்கடியான சூழலில், பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தார் எதிர்கொண்டுள்ள சிக்கல்களிலிருந்து ஓரளவேனும் நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, 100க்கும் அதிகமான குறைந்த வசதிகள் படைத்த மக்களுக்கு ஒவ்வொரு வேலைநாளிலும் போஷாக்கான இரவு உணவு வேளையை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்திருந்ததுடன், அதனூடாக உணவு பாதுகாப்பின்மையை தீர்ப்பதற்கு Aberdeen இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
தனது 14 துணை நிறுவனங்களினூடாகவும், 1300க்கும் அதிகமான ஊழியர்களினூடாகவும் இயங்கும் Aberdeen Holdings, தனது மனிதநேய சென்றடைவை மேலும் விஸ்தரிப்பதற்கு முன்வந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் தூரநோக்குடைய நிகழ்ச்சிநிரலில், மேலும் பல சமூக சமையலறைகளை அறிமுகம் செய்வது, ஆபத்தில் உதவும் உணவு மற்றும் கல்வி, கர்ப்பிணி, சுகாதாரம் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு விசேடத்துவமான உணவு நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு Aberdeen இன் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளதுடன், சமூகத்தில் அதன் பங்களிப்பை மேம்படுத்துவதாகவும் உள்ளது.
தமது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் மூலம் பொது மக்களுடனான ஈடுபாட்டை மேம்படுத்தும் Aberdeen இன் அர்ப்பணிப்பு, அண்மைய சிநேஹதான அறக்கட்டளையின் இணையத்தள அறிமுகத்தினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Aberdeen Holdings இன் இயக்குநர் ஷபிக் காசிம் அவர்களால் இந்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன், இந்நிகழ்வில் தவிசாளர் சத்தார் காசிம் மற்றும் முன்னாள் தவிசாளர் ஒஸ்மான் காசிம் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர். இந்தத் திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திறவுகோலாக இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் Aberdeen Holdings இன் கீர்த்திநாமம் உறுதி செய்யப்பட்டதுடன், தொடர்ந்தும் முன்னுதாரணமாக இயங்கி, சமூகங்களில் தனிநபர்களின் வாழ்க்கையில் நிலைபேறான மேம்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 hours ago
7 hours ago