Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 14 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
AFI Corp, தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் IWill உடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. தனிநபர்களின் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநல சவால்களை முறியடிப்பதற்கும், தனிநபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களாகவும் தங்களின் உயர்மட்ட சுய அடையாளத்தை அடைய அவர்களுக்கு உதவுவதற்காக நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட சிகிச்சைக்கான உயர்தர தளமாகவும் அமைந்துள்ளது.
IWill என்பது IWill செயலி (Android & iOS) மூலம் ஒன்லைனில் கிடைக்கும் முழுமையான மன மற்றும் உணர்ச்சிப் பாதுகாப்பு அமைப்பாகும். இது சிறப்பு சிகிச்சை திட்டங்கள் மற்றும் அமர்வுகள், மனநல வகுப்புகள், மதிப்பீடுகள் மற்றும் பிற கருவிகளை உள்ளடக்கியது. IWill செயலியில் 98% வெற்றி விகிதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுப் பரவலானது, வயது, தொழில் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களின் மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர் மற்றும் கடுமையான வாழ்க்கை மாற்றம் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சூழ்நிலைகளில் இந்த அழுத்தம் மனச்சோர்வு, பதட்டம், கோபம், விரக்தி அல்லது பயம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. இது உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கையில் பொதுவான திருப்தியைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
AFI Corp இன் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் சச்சின் முனசிங்க கூறுகையில், “IWill ஒரு செயலி மூலம் வழங்கப்படுகின்றது, பயனர்களுக்கு வசதியாகவும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகலையும் வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் வீட்டின் வசதியில் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது மட்டுமல்லாமல், களங்கத்தை சமாளிக்க வேண்டியதில்லை. அது இன்னும் துரதிஷ்டவசமாக மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், செயலியைப் பதிவிறக்குவது, மதிப்பீட்டை எடுத்துக்கொள்வது மற்றும் அவர்களின் IWill பயணம் தொடங்குகின்றது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வசதியாக இருக்கும்.
IWill ஐ இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, Assette software Pvt. Ltd மற்றும் Future Fibres Pvt. Ltd இன் உத்தியோகபூர்வ ஊழியர் நல்வாழ்வு பங்காளராக “AFI Corp - IWill Sri Lanka” நிறுவனத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தற்போது பல நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைப்பெற்றுவரும் அதேவேளை, பல தனிப்பட்ட பதிவிறக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Assette மென்பொருள் என்பது ஒரு நம்பகமான தரவு மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும். விற்பனை மற்றும் இணையத் தகவல்தொடர்புகளை உருவாக்குதல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை தானியங்குபடுத்தும் நிறுவனமாகும்.
Future Fibres நிறுவனம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை இலங்கையின் பியகமவை மையமாகக் கொண்டுள்ளதுடன், விற்பனை, வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களை ஸ்பெயினின், வெலன்சியாவில் நிறுவியுள்ளது. இந்த நிறுவனமானது, இலங்கையில் உலகளாவிய கடல்சார் பகிர்வு சேவை மையத்தையும் கொண்டுள்ளது. இது பரந்த குழு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றது.
"மக்கள் எங்கள் வணிகத்தின் இதயத்தைப் போன்றவர்கள். மேலும் Future Fibres குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. Future Fibres இன் அங்கமான நாம், நமது ஊழியர்களுக்கு மனநலம் மற்றும் நல்வாழ்வில் ஆதரவளிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றோம். மேலும் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த சேவையை வழங்குகின்றோம்." என நாட்டிற்கான பணிப்பாளரும் Future Fibres இன் இயக்குநருமான ஹாதீம் ரஜாப்தீன் கூறினார்.
நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குமான தரமான மற்றும் கொள்வனவு தகுதிக்கேற்ற மனநல ஆதரவை வழங்குவதன் மூலம், இலங்கையில் மனநலம் சார்ந்த இடத்தை மாற்றியமைக்கக்கூடியதாகவிருக்கும் என IWill Sri Lanka நம்புகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .