Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஷென் ஜெனில் நவம்பர் 24ஆம் திகதிஅன்று, உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார பெட்டரிகள் தயாரிப்பாளரான BYD, அதன் 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை Zhengzhou தொழிற்சாலையில் உற்பத்தி செய்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
அத்தகைய மைல்கல்லை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்தியுள்ள இந்த சாதனை, மின்சார வாகனத்துறையில் முன்னோடியாக முன்னேறுவதற்கு BYD இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
வெறும் மூன்று மாதங்களில் 5 மில்லியனில் இருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான புதிய ஆற்றல் வாகனத்தை தாண்டிய நிலையில், BYD இன் துரிதமான வேக உற்பத்தி மற்றும் விற்பனையில் புதிய அளவை நிர்ணயித்துள்ளது. BYD இன் தொழில் முறை தனிப்பயனாக்கப்பட்டதுணைபிராண்டான FANGCHENGBAO இன் கீழ்Super Hybrid hardcore SUVஆனBAO 5 என பெயரிடப்பட்ட 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மகிழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான John Keells Holdings PLC (JKH) உடனான BYD இன் மிக சமீபத்திய கூட்டு உடன் படிக்கையின் பின்னணியில், பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தில் புதிய ஆற்றல் வாகனங்களை (NEV) வழங்குவதற்கு இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் ஒத்துழைப்பாக அமைந்துள்ளது. இது இலங்கை சந்தைக்கான பொருளாதார, சுற்றுச்சூழல் உணர்வுள்ள முன்னேற்றத்தீர்வுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்து கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago
50 minute ago
2 hours ago