Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட debit moratorium ஒரு விளம்பரம் மட்டுமே என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன,
“இன்று நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருகடிகளுக்கு முகம்கொடுத்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளையும் தனிநபர்களையும் பாதுகாப்பதற்கு வழங்கப்படும் நிதி நிவாரணமாக இந்த 50 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்துவதாக அரசினால் ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடானது விருந்தோம்பல் தொழிற்றுறை (Hospitality Industries) மற்றும் ஓய்வுத் தொழிற்றுறை (Leisure Industries) உட்பட அனைத்து பாதிக்கப்பட நிறுவனங்களினதும் நடைமுறையில் இருக்கும் கடன்களுக்கு 6 மாதங்களுக்கான விடுப்பு, நிரந்தர மேலதிகப் பற்றுக்கு 6 மாதங்களுக்கான கால அவகாசம், தற்காலிக மேலதிகப் பற்றுக்கு இரண்டு மாதங்களுக்கான கால அவகாசம் 13% வருட வட்டி வீதத்தில். ஓட்டோ, பாடசாலை வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கான கடன் தவணைக்கட்டணம் 6 மாதங்கள் நீட்டிப்பு. நிறுத்தப்பட்டுள்ள கடன்களை மீளச் செலுத்த கடனாளிகளுக்கு தவணைக் கட்டணங்களை மீள் ஒழுங்குபடுத்துதல் எனப் பல சலுகைகளுக்குப் பயன்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“இச் செயற்றிட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகூடிய 25 மில்லியன் வரைக்குமான பணி மூலதனக் கடன் மற்றும்
அதிகூடிய 300 மில்லியன் ரூபாய்க்கான புதிய முதலீடுகளுக்கான கடன் என்பன வெறும் விளம்பரம் மட்டுமே.
“நாட்டில் உள்ள வங்கிகளின் மொத்த கடன் தொகை 10 த்ரில்லியன் ரூபாயக இருக்கும் போது அரசாங்கம் அறிவுத்துள்ள debit moratorium ஒதுக்கீடு 50 பில்லியன் ரூபாய் என்பது வெறும் 5% வீதம் மட்டுமே. இது இந்த மொத்த கடன் தொகையின் வட்டி அளவினைக் கூட சமன் செய்யப் போதுமானது அல்ல. மேலும் சிறிய தனியார் வங்கிகள் தங்களுடைய கடன் தொகையில் 45% வீதத்தைச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தான் வழங்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் வழங்க வற்புறுத்துவது அந்த வங்கிகளின் நிதி நிலைமையை பாதிக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.
“இந்த அரசாங்கத்தின் அறிவிப்பில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி மூலதனக் கடனாக அதிகூடியது 25 மில்லியன் ரூபாய் பெறமுடியும் அல்லது இரண்டு மாத பணி மூலதனத் தொகையினைப் பெற முடியும் எனக் காணப்பட்டது. ஆனால் இன்று அதற்காக விணப்பம் செய்த வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாத பணி மூலதன (working capital) நிதி மாத்திரமே கிடைக்கும் என வங்கிகள் தெரிவித்துவருகின்றது.
“இன்று கொவிட்19 தொற்று, நாட்டில் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடக்கின்றன. இந்த நிலையில் இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமான மூலகம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடகை, சம்பளம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு இவ்வாறான நிறுவனங்கள் முகம்கொடுத்துவருகின்றன. இந்த நிலையில் இரண்டு மாத working capital மாத்திரம் தான் கடனாகப் பெற முடியும் என்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?
“குறைந்தது 6 மாதங்களுக்கான working capital க்கான நிதிகளை கடனாக வழங்க வேண்டும். இதற்கான கடன் வழக்கும் செயற்பாட்டை இலகுபடுத்த வேண்டும். பெரும்பான வங்கிகள் இந்த விண்ப்பங்களை மே மாதம் தான் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே கடந்த இரண்டு மாதங்களாக இயங்க முடியாமல் தடுமாறுகின்ற இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேலும் இக்கட்டான நிலைமைக்குச் சென்றுவிடும். இது இலங்கையின் பொருளாதாரத்தை மிகப் பலமாக பாதிக்கும். தொழில் இழப்புகள் மற்றும் இதர பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும்.
“அரசாங்கம் இதனைக் கருத்திற்கொண்டு தாங்கள் அறித்துள்ள debit moratorium ஒதுக்கீட்டுத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த நிதிக்கு விண்ணப்பிப்பதில் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள். ஆகவே, விணப்பத்துக்கான கால எல்லையை ஏப்ரல் 30இல் இருந்து குறைந்தது மே 31ஆம் திகதி வரைக்கு நீடிக்க வேண்டும்” என, கலாநிதி வி.ஜனகன், மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025