Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூன் 27 , பி.ப. 01:25 - 0 - 119
2022 கிரேஷியன் பரிசுக்கான கூட்டு வெற்றியாளர்களாக Keeping Time and Other Stories என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சிரந்தி ராஜபக்ஷ The Wretched and The Damned என்ற நாவலுக்காக யுதஞ்சய விஜேரத்ன அவர்களையும் கிரேஷியன் அறக்கட்டளை அறிவித்துள்ளது. எச்.ஏ.ஐ. குணதிலக பரிசானது ரூபவ் சரசவி வெளியிட்ட 14 சிங்கள மொழிச் சிறுகதைகளின் மொழியாக்கமானJewels இற்காக மானெல் எரியகமவுக்கு மாலைப்பொழுது நிகழ்வில் வழங்கப்பட்டது. பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பு வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஜூன் 17 ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கிரேஷியன் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் நிலோஃபர் டி மெல் அவர்கள் ரூபவ் மைக்கேல் ஒன்டாஜ்ஜியின் இன் Skin of the Lion என்ற நாவலில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் அறக்கட்டளையின் பயணத்தையும் ரூபவ் இலக்கியக் காட்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்ததையும் பிரதிபலிக்கின்றமையையும் சுட்டிக்காட்டினார். அறக்கட்டளையை வழிநடத்திய கடந்தகால தலைவர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கும் ரூபவ் கடந்த ஐந்து ஆண்டுகளாக அறக்கட்டளையின் முதன்மை அனுசரணையாளராகச் செயற்பட்டு வந்துள்ள ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ரூபவ் அறக்கட்டளை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட்டுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட எழுத்தாளர்களை செயலமர்வுகள் மற்றும் சிறப்பு உரைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருகிறது. பேராசிரியர் டி மெல் மேலும் குறிப்பிடுகையில் ரூபவ் சவாலான பொருளாதாரச் சூழல் இருந்த போதிலும் ரூபவ் அவர்களின் கூட்டாளர்களின் உதவியுடன் ரூபவ் அறக்கட்டளை அதன் செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்தியதுள்ளதுடன் ரூபவ் கிரேஷியன் இளம் எழுத்தாளர்கள் கழகம் (Gratiaen Young Writers Club) ரூபவ் பகிரங்க பேச்சு நிகழ்வுகள் மற்றும் இளங்கலை படைப்பாற்றல் எழுத்துப் பயிற்சிச் செயலமர்வுகள் ஆகியவை இதில் அடங்கியுள்ள நிலையில் ரூபவ் இளையோருக்கு ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு வழிகாட்டுகிறது.
கிரேஷியன் அறக்கட்டளை 1992 ஆம் ஆண்டில் இலங்கை வம் சாவளியைச் சேர்ந்த சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற நாவலாசிரியர் ரூபவ் கவிஞர் மற்றும் கட்டுரையாளர் மைக்கேல் ஒன்டாஜ்ஜி என்பவரால் நிறுவப்பட்டது. மைக்கேல் ஒன்டாஜ்ஜி தனது The English Patient நாவலுக்கு கிடைத்த புக்கர் பரிசுத் தொகையை இதற்கு நிதியாக வழங்கியதுடன் ரூபவ் மைக்கேல் ஒன்டாஜ்ஜியின் இலக்கானது ரூபவ் நாட்டில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர்களால் ஆங்கிலத்தில் படைப்புக்கள் எழுதுவதை அங்கீகரித்து ரூபவ் ஊக்குவிக்கும் ஒரு அறக்கட்டளையை நிறுவுவதாகும் 2003 ஆம் ஆண்டில் அறக்கட்டளையானது சிங்களம் மற்றும் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக எச்.ஏ.ஐ . குணதிலக பரிசை அறிமுகப்படுத்தியது. இந்த பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago