Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 09 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இளம் தலைமுறையினர் மத்தியில் தொழில் முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் ‘21FOR21’ தொனிப்பொருளில் 2020 உலக இளைஞர் திறன்கள் தினம் (WYSD), சர்வதேச இளைஞர் தினம் (IYD) ஆகியவற்றை நினைவுகூறும் முகமாக எயார்டெல் லங்கா நிறுவனம் USAID நிறுவனத்தின் நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், தொழில்முனைவு திட்டமான YouLead உடன் கைகோர்த்துள்ளது. இந்த செயற்றிட்டத்தின் நோக்கமானது, 21ஆம் நூற்றாண்டில் இளைஞர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் குறித்த 21 நெருக்கடிகள் உள்ளடக்கிய திறன்களை அறிமுகம் செய்வதாகும்.
இந்த ஆண்டு WYSD & IYD தினமானது ஒரு சவாலான காலத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. கொவிட் – 19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் lockdown நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதனால், உலகம் முழுவதிலும் செயற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்றதுடன் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதனால் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. மீண்டும் வழமையான நிலைக்கு வருவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எயார்டெல் நிறுவனம் தொற்றுநோயின் பின்னர் online ஊடாக தொடர்ச்சியாக திறன்களை மேம்படுத்துவதற்காக இளம் சமூகத்தினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் YouLead உடன் இணைந்தது.
நெருக்கடிகளை உள்ளடக்கிய சிந்தனை, புத்தாக்கம், தொழில்நுட்ப அறிவு, பன்முகத்தன்மை போன்ற எயார்டெல் நிறுவனத்தின் முக்கியமான திறன்களை ஆதரிக்கும் இந்த நடவடிக்கையில் youlead.lk/skills, என்ற தளம் இடம்பெற்றதுடன், இது வெற்றிகரமான வாழ்க்கையில் இந்த திறன்களின் பங்கை எடுத்துக்காட்டுகின்ற தொடர்ச்சியான வீட்டியோக்கள், நடைமுறையான நடவடிக்கைகள் குறித்த மேலதிக அறிவைப் பெற்றுக் கொடுக்கும் பல்வேறு Webinarகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பங்குடைமை குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல்லின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “சம்பிரதாய தொழில்நுட்பத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு வேகமாக பயணம் செய்து டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாம் முன்னேரியுள்ளோம். அதனால், எமது இளைய சமூகத்தினர் அவர்களது அதிகரித்து வரும் இளம் திறமைகளை அடையாளம் கண்டு டிஜிட்டல் யுகத்திற்கு அமைய வடிவமைப்பது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் புதிய தொழில்முனைவு சந்தர்ப்பங்கள் ஏற்படும். இலங்கை இளைஞர்களை பலப்படுத்தும் சிறந்த மொபைல் தொலைதொடர்பு சேவை வழங்குநராக எதிர்கால சந்ததியினருக்கு புத்தாக்கங்கள், சிக்கல்களைத் தீர்த்தல், நெருக்கடிகளை உள்ளடக்கிய சிந்தனை, தொழில்நுட்ப அறிவு மற்றும் எதிர்கால தொழில்புரியும் நிறுவனத்தின் முன்னேற்றங்களுக்கு அவர்களுக்கு தேவையான ஏனைய பல்வேறு திறன்கள் குறித்தும் எதிர்கால சந்ததியினரை பயிற்சியளிப்பதற்கு YouLead உடன் ஒன்றிணைவதற்கு கிடைத்தமையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்தார்.
அமெரிக்க மக்களினால், நிதி வழங்கப்படும் YouLead வேலைத்திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் தொழில் ரீதியான கல்வியினை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சியளித்தல், பெரும் திறமைகளுடன் கூடிய ஒரு வலுவான சக்தியை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன மற்றும் தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புக்கு பலமாகவுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பிரதான அபிவிருத்தி நிறுவனமான சர்வதேச அபிவிருத்தி தொடர்பிலான அமெரிக்க நிறுவனம் (USAID) இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.
‘21FOR21’ பிரசார நடவடிக்கையானது, தொழில் புரியும் இடங்களில் நடத்தப்பட்ட “Skills in Action” எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற புகைப்பட போட்டியில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பெறுமதியான ஸ்மார்ட் அலைபேசிக்கு பயன்படுத்தப்படும் சாதனம் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த சாதனத்தை வீட்டிலிருந்து வேலை/ கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும்.
இலங்கை அரசின் யோசனையின் கீழ் 2014 டிசெம்பரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட உலகளாவிய வேலைத் திட்டமாக, உலக இளைஞர் திறன்கள் தினம் (WYSD) இளைய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக இளம் சமூகத்தினருக்கு மற்றும் கல்வியாளர்கள் என இருபிரிவினருக்கும் தேவையான, தொழில் வாய்ப்பை இலக்காகக் கொண்ட உயர் தரத்திலான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களை வளர்ப்பதற்கான நினைவூட்டலாக இது செயற்படுகிறது.
அண்மையில் நிறைவடைந்த 21FOR21 ‘Skills at Work’ புகைப்பட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு உலக வர்த்தக மத்திய நிலையத்தில் அமைந்துள்ள எயார்டெல் லங்கா பிரதான அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றதுடன் (இடமிருந்து வலமாக): வெற்றிபெற்ற மூவரான நிஷாந்த ராஜசேகரம், தரித்து திலீப, காஞ்சன ஹேரத், எயார்டெல் லங்காவின், பிரதான விற்பனை அதிகாரி, சந்திரசேகர் சிங் சௌவான், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான USAID நடவடிக்கை பணிப்பாளர், ரீட் ஏஷ்லிமன், YouLead ஒத்துழைப்பு பணிப்பாளர், விந்தியா சில்வா மற்றும் Head – Contact Experience Airtel, ஃபவாஸ் நிஷம்தீன் ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
24 minute ago
34 minute ago