Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 07 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. வங்கியின் நிகர வருமானம் ரூ. 16.5 பில்லியனாகவும், தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 4.8 பில்லியனாகவும் பதிவாகியிருந்தது. குறைந்து செல்லும் வட்டி வீதங்கள் நிலவிய சூழலில், கடன் புத்தகங்களை மீள விளையிடலுக்கான அவசியத்தை உணர்த்தியிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருமான மட்டங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், பிரதான வியாபார பிரிவுகளில் வங்கி சிறந்த வளர்ச்சியை பதிவு செய்து, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கியியலுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது.
வங்கியின் நிகர கடன் பிரிவு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28% ஆல் உயர்ந்து ரூ. 88.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்துறையின் சராசரி வீதமான 4.1% ஐ விட உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பரந்தளவு வாடிக்கையாளர் இருப்புக்கான புத்தாக்கம் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதிசார் தீர்வுகளில் வங்கியின் மூலோபாய நோக்கினூடாக இந்த விரிவாக்கத்தை எய்த முடிந்தது. யூனியன் வங்கியின் வைப்பு இருப்பு ரூ. 100 பில். மைல்கல்லை எய்தி ரூ. 103.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.9% உயர்வை பதிவு செய்திருந்தது. இதில் மூலோபாய மீள வர்த்தக நாமமிடல் முயற்சிகள், வலுவூட்டப்பட்ட விற்பனை அடிப்படையிலான கலாசாரம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டில் வங்கியின் ஒப்பற்ற நோக்கு போன்றன பங்களிப்பு செய்திருந்தன.
கட்டண மதிப்பிறக்கங்கள் 91.4% இனால் குறைந்து 2023 இல் பதிவாகிய ரூ. 1643 மில்லியனிலிருந்து 2024 இல் ரூ. 142 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, வங்கியின் மேம்படுத்தப்பட்ட கடன் வழங்கல் மற்றும் கடன் உருவாக்க நியமங்களை சொத்துக்களின் தரத்தை பாதுகாப்பதில் பிரதிபலித்திருந்தது. 2024 ஆம் ஆண்டில், வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 1.2 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் (PAT) ரூ. 300 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் துரித மூலதன விகிதம் 16.6% ஐ பேணியிருந்ததுடன், இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட மிகவும் உயர்வானதாக காணப்பட்டது. 2024 இல், யூனியன் வங்கி குழுமம் வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் (PAT) ரூ. 300 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 147.2 பில்லியனிலிருந்து ரூ. 155.6 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 5.6% வளர்ச்சியாகும்.
யூனியன் வங்கியின் தவிசாளர் தினேஷ் வீரக்கொடி குறிப்பிடுகையில், “வங்கி அடுத்த கட்ட வளர்ச்சியை எய்துவதற்காக, தூர நோக்கையும், பரந்த மூலோபாயத் திட்டத்தை வங்கி வடிவமைத்துள்ளது. புத்தாக்கத்தை பின்பற்றுவது, தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை வலிமைப்படுத்தல் போன்றவற்றினூடாக, துரிதமான மேம்படும் நிதிசார் கட்டமைப்பில் நிலைபேறான வெற்றியை எய்துவதற்கு வங்கியை நிலைநிறுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ “வங்கியியல் துறையில் சிறந்த போட்டியாளராக திகழ்வதற்கான எதிர்பார்ப்பை யூனியன் வங்கி கொண்டுள்ளது. வாடிக்கையாளரை மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் சேவைச் சிறப்பு போன்ற எமது பிரதான பெறுமதிகளை உள்வாங்கி வங்கியை மாற்றியமைப்பதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம். அதற்காக நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் டிஜிட்டலுக்கு முன்னுரிமை வழிமுறையையும் பின்பற்றுவோம். தொழினுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் படைத்த திறமைகள் போன்றவற்றை இணைத்து, உறுதியான, வலிமையான வங்கியை நாம் கட்டியெழுப்புவதுடன், அதனூடாக எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago