Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
Microsoft ஸ்ரீ லங்காவினால் AI ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வடிவமைப்பதற்கு வலுவூட்டும் பிராந்திய Imagine Cup போட்டி 2023 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்ததுடன், அவற்றில் HearMe, DevRelax அணிகள் மற்றும் Autumn அணி ஆகியன Microsoft Sri Lanka Imagine Cup இன் பிராந்தியமட்ட வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து Imagine Cup Global அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக HearMe மற்றும் DevRelax ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன. global அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னேற்றம் கண்டுள்ள 19 அணிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அணிகளாகவும் அமைந்துள்ளமையால், இலங்கையைப் பொறுத்தமட்டில் இது மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.
மூன்று பிராந்திய வெற்றியாளர்களுக்கும் Microsoft இலங்கை அலுவலகத்துக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதர அணியினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் புத்தாக்கங்களையும் பார்வையிட்டிருந்தனர். மேலும், தமது புத்தாக்கமான தீர்வுகளைப் பற்றி, Microsoft இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனீத் சந்தோக் மற்றும் Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகள் முகாமையாளர் ஹர்ஷ ரன்தெனி ஆகியோருக்கும் விளக்கமளித்திருந்தனர். இந்த மாணவர்களின் திறமைகளை கண்டு இரு தலைவர்களும் திருப்தியை வெளியிட்டிருந்ததுடன், அவர்களின் தீர்வுகளை மேம்படுத்தி செம்மைப்படுத்திக் கொள்வதற்கான மேலதிக ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
HearMe மற்றும் DevRelax அணிகளில் Sri Lanka Institute of Information Technology (SLIIT) இன் மாணவர்கள் அடங்கியிருந்தனர். இதில் HearMe அணியைச் சேர்ந்தவர்கள் செவிப்புலன் குறைபாடுடைய சிறுவர்கள் மத்தியில் சொற்திறன் மற்றும் மொழித்திறன்களை துரிதப்படுத்த புத்தாக்கமான வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த பயிலல் சாதனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அணியினர் தமது தயாரிப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “எமது தயாரிப்பை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு தொடர்பில் நாம் பெருமளவு மகிழ்ச்சி கொள்வதுடன், செவிப்புலன் குறைப்பாட்டுடன் வாழும் சிறுவர்கள் மத்தியில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இதனை வடிவமைத்துள்ளோம். அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப நாம் எதிர்பார்ப்பதுடன், மொழியைப் பயிலும் அவர்களின் கல்விப் பயணத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தீர்வை நாம் வடிவமைத்துள்ளோம்.” என்றார்.
DevRelax அணியினால் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட desktop அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டிருந்தது. தொழிற்துறையின் பிரத்தியேகமான கேள்விகளுக்கான அழுத்தத்தை குறைக்கும் பரிபூரண தீர்வை வழங்கும் வகையில் இது அமைந்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் அந்த அணியினர் குறிப்பிடுகையில், “தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நபர்களின் நலன் என்பது அழுத்தங்கள் நிறைந்ததாகவும், சவால்களை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உணர்வுகள் மற்றும் அழுத்தங்களை நிர்வகிக்கும் வகையில் தொழில்நுட்பசார் தீர்வை நாம் வடிவமைத்துள்ளோம். எமது புத்தாக்கத்தை பயன்படுத்தி, ஆரம்பநிலை நிறுவனமொன்றை நிறுவ எதிர்பார்ப்பதுடன், அதனூடாக இலங்கையில் வளர்ந்து வரும் இந்தத் துறைக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) Autumn அணியினால், பெற்றோருக்கு தமது பிள்ளைகளில் ஒட்டிசம் தொடர்பில் இனங்காண்பதற்கு பெற்றோருக்கு உதவும் வகையிலான தீர்வை வடிவமைத்துள்ளது. “எமது தீர்வுடன், பெற்றோருக்கு தமது பிள்ளைகளில் ஒட்டிசத்தை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்பதற்கான ஆதரவு வழங்கப்படுவதுடன், தொடர்பாடல் செயற்பாடுகளினூடாக பிரத்தியேகமான ஆதரவை வழங்குவதுடன், அதனூடாக தொடர்பாடல் மற்றும் உணர்வுபூர்வமான ஒழுங்குபடுத்தல்களை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago